»   »  திருமணத்திற்கு தயாராகும் ரகுல் ப்ரீத் சிங்: ஆனால், மாப்பிள்ளை தான்...

திருமணத்திற்கு தயாராகும் ரகுல் ப்ரீத் சிங்: ஆனால், மாப்பிள்ளை தான்...

By Siva
Subscribe to Oneindia Tamil
ரகுல் ப்ரீத் சிங்-க்கு கல்யாணமா?

ஹைதராபாத்: ரகுல் ப்ரீத் சிங் பேசுவதை பார்த்தால் திருமணத்திற்கு தயாராகிவிட்டார் போலயே.

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் படங்களில் பிசியாக உள்ளார் ரகுல் ப்ரீத் சிங். ஓடியோடி உழைக்கும் அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் விரும்புகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறியதாவது,

அம்மா

அம்மா

கெரியர் மீது செலுத்தும் கவனத்தை தனிப்பட்ட வாழ்க்கை மீதும் செலுத்துமாறு என் அம்மா கூறுகிறார். எப்பொழுது பார்த்தாலும் வேலை வேலை என்று இருக்க வேண்டாம் என்கிறார் அவர். விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகுமாறு அம்மா வலியுறுத்தி வருகிறார். இது குறித்து எங்க அம்மா கிளாஸே எடுத்துவிட்டார்.

திருமணம்

திருமணம்

இன்னும் எத்தனை நாட்களுக்கு சிங்கிளாக இருப்பது என்று அம்மா கேட்கிறார். என் அம்மா சொல்வது போன்று உடனே திருமணம் செய்து கொள்ள எனக்கு மும்பை அல்லது ஹைதராபாத்தில் காதலர் இல்லை. அதனால் யாரையாவது பார்த்துக் கொடுக்குமாறு நண்பர்களிடம் தெரிவித்துள்ளேன் என்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங்

தனது வருங்கால கணவர் 6 அடி உயரம் இருக்க வேண்டும். முக்கியமாக தெலுங்கு பேசுபவராக இருக்க வேண்டும் என்று ரகுல் ப்ரீத் சிங் முன்பு தெரிவித்திருந்தார். அவரும், நடிகர் ராணாவும் காதலிப்பதாக டோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதையடுத்து தானும், ராணாவும் நல்ல நண்பர்களே தவிர காதலர்கள் இல்லை என்று விளக்கம் அளித்தார் ரகுல்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ரகுலின் பேட்டியை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று நம்புகிறார்கள். நண்பர்கள் பார்க்கும் நபர் ரகுலுக்கு பிடிக்க வேண்டுமே. ரகுல் தன் அம்மாவின் ஆசையை கூடிய சீக்கிரம் நிறைவேற்றி வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Actress Rakul Preet Singh's parents want her to marry and settle down soon.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more