“எதையும் நம்பாதீங்க”.. ரசிகர்களுக்கு ‘அவசர அலர்ட்’ கொடுத்த ரகுல் பிரீத்தி சிங்!
தனது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் ரகுல் பிரீத்திசிங்.
Recommended Video

சென்னை: தனது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதால், அதில் வெளியாகும் எந்தத் தகவல்களையும் நம்ப வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகை ரகுல் பிரீத்திசிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கியுள்ளார் நடிகை ரகுல் பிரீத்திசிங். தற்போது இவர் கார்த்தியுடன் தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே. உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அவசரச் செய்தியாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், 'என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதில் வெளியாகும் எந்த லிங்க் மற்றும் செய்திகளையும் ரசிகர்கள் நம்ப வேண்டாம். நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து மீடூ ஹேஷ்டேக் வெளியிட்டு வரும் நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்தவர்களும் அதுபோன்ற விஷமச் செயல்களில் ஈடுபடலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரகுல் பிரீத்திசிங் இவ்வாறு எச்சரிக்கைப் பதிவு வெளியிட்டுள்ளார் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











