கொரோனா காரணமாக நடிக்க மறுத்தேனா.. வைரலான அயலான் வதந்தி.. கொந்தளித்த ரகுல் ப்ரீத் சிங்!
சென்னை: கொரோனா காரணமாக ஷூட்டிங்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்க மறுத்ததாக வைரலான வதந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை படத்தை இயக்கியவர் ரவிக்குமார்.
அடுத்ததாக சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அயலான் படத்தை இயக்கி வருகிறார்.

ரஹ்மான் இசை
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஆடி, பாடி, நடிக்க வேண்டும் என்ற சிவகார்த்திகேயனின் கனவு நனவாகும் வகையில் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானை இசையமைக்க 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் ஒப்பந்தம் செய்திருந்தது. ஏலியன் படம் என்பதால், அதிக பொருட்செலவில் இந்த படம் உருவாகி வருகிறது.

நிறுத்தம்
24 ஏ.எம் ஸ்டூடியோஸில் உருவான ரெமோ, சீமராஜா உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், கடன் பிரச்சனையால் தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா சிக்கிக் கொண்டார். அதன் காரணமாக அயலான் படத்தின் ஷூட்டிங்கை தொடர முடியாமல், அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

பிரச்சனை ஓவர்
சமீபத்தில் தனது பிரச்சனைகளை சரி செய்த ஆர்.டி ராஜா அயலான் படத்தை மீண்டும் தயாரிக்க ஆயத்தமானார். 4 கட்ட ஷூட்டிங் முடிந்து விட்டதாகவும், இன்னும் சில கட்ட ஷூட்டிங் செய்தால் போதும் என்றும் அறிவித்து கடந்த பிப்ரவரி மாதம் அயலான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எல்லாம் வெளியிட்டு வைரலாக்கினர்.

வைரலான வதந்தி
இந்நிலையில், தற்போது மார்ச் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியதாகவும், ஆனால், ரகுல் ப்ரீத் சிங் கொரோனா பரவல் காரணமாக ஷூட்டிங் வர பயந்து மறுத்ததாகவும் வதந்தி ஒன்று வைரலானது. அதனை தொடர்ந்து ஆன்லைன் போர்ட்டல் ஒன்று அதனை செய்தியாக வெளியிட ரகுல் ப்ரீத் சிங், அது பொய் செய்தியென வெளுத்து வாங்கி உள்ளார்.

ரவிக்குமார் பதில்
மேலும், இயக்குநர் ரவிக்குமாரும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு ஆதரவாக நின்று, அது முற்றிலும் தவறான செய்தி என்றும், தாங்கள் ஷூட்டிங் நடத்தவில்லை. அப்படியே நடத்தினாலும், அவர் தவறாமல் கலந்து கொள்வார். ரகுல் ஒரு பக்காவான தொழில் பக்தி கொண்டவர் என்று பாராட்ட, நன்றி தெரிவித்த ரகுல் ப்ரீத் சிங், ஷூட்டிங்கில் நடிக்க காத்திருப்பதாக பதில் அளித்தார்.


Click it and Unblock the Notifications











