கருப்பு வெள்ளையில் பிரபல நடிகையின் அப்படி இப்படி போட்டோ.. டிரெஸ்சை மாற்றச் சொல்லும் ரசிகர்கள்!
சென்னை: பிரபல நடிகை பதிவிட்டுள்ள கருப்பு வெள்ளைப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில் யுவன், தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உட்பட சில படங்களில் நடித்தவர், ரகுல் பிரீத் சிங்.
இப்போது சிவகார்த்தியேன் நடிக்கும் அயலான், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

கொரோனா
தெலுங்கிலும் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், அடுத்து இந்தியில் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்த படங்களின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. லாக்டவுனால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் நிபந்தனைகளுடன் படப்பிடிப்பை மீண்டும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கால்ஷீட் விவகாரம்
இதற்கிடையே, நடிகர், நடிகைகளின் கால்ஷீட் கண்டபடி சிக்கலில் சிக்கி இருக்கிறது. மொத்த திட்டமும் சிதைந்து போனதில் நடிகர், நடிகைகள் குழப்பத்தில் உள்ளனர். லாக்டவுன் முடிந்து படப்பிடிப்புத் தொடங்கப்பட்டால், கால்ஷீட் விவகாரம் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. நடிகை ரகுல் பிரீத் சிங், தனது மொத்த திட்டமும் சொதப்பி விட்டதாகக் கூறி இருந்தார்.

கருப்பு, வெள்ளை
இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடும் நடிகைகளில், இவரும் ஒருவர். அடிக்கடி புகைப்படங்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள், லைக்ஸ்களையும் கருத்துக்களையும் சரமாரியாகத் தெரிவிப்பார்கள். கடந்த சில நாட்களாக நடிகைகள் கருப்பு, வெள்ளை புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

கிளாமர் போட்டோ
நடிகை ரகுல் பிரீத் சிங்கும் கருப்பு வெள்ளையில், கிளாமரான போட்டோ ஒன்றை, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் லைக்ஸ்களை அள்ளிக் குவித்துள்ளனர். சூரிய ஒளி எனக்குப் பிடித்தமான துணை என்று கேப்ஷன் கொடுத்துள்ளார், அந்த போட்டோவுக்கு. இதற்கு பாடகி சின்மயி உட்பட சில பிரபலங்கள் கமென்ட் போட்டுள்ளனர். சில நெட்டிசன்கள், ஐயையோ இதென்ன டிரெஸ்? உடனே மாத்துங்க என்று கூறியுள்ளனர்.

வேற லெவல்
இன்னொருவர் நீங்க அழகிதான். அதுக்காக இப்படியா டிரெஸ் போடுவீங்க? என்று கேட்டுள்ளார். ஒருவர். இந்த லுக் வேற லெவல்ல இருக்கு என்று கூறியுள்ளனர். சூரியஒளி துணையா? அந்த துணையை எப்படி பயன்படுத்துவீங்க? என்று ஒரு நெட்டிசன் கிண்டலாக கேட்டுள்ளார். இன்னொருவர், நல்ல டிரெஸ் இருந்தா கொண்டு வந்து இவங்ககிட்ட கொடுங்கப்பா என்று கூறியுள்ளார்.

ஒரே ஒரு பதில்
நல்லா இருந்த நீங்க, ஏன் இப்படி ஆனீங்க? இந்த டிரெஸ் அழகா இல்லை. வேற போட்டோ போடுங்க' என்று சிலரும் நீங்க செக்ஸியாக இருக்கீங்க, செம, செம ஹாட், பிரமாதம், மானே, தேனே என்று சிலரும் அநியாயத்துக்கு வழிந்துள்ளனர். சிலர், ஒரே ஒரு பதில் கேட்டு அவரை நச்சரித்து வருகின்றனர். இந்தப் படம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











