’காண்டம்’ பரிசோதிக்க ஆர்வமாக கிளம்பிய பிரபல நடிகை.. என்ன மேட்டருன்னு பாருங்க!

சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங் இதுவரை இந்திய சினிமாவில் எந்த நடிகையும் செய்ய துணியாத கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்.

அதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

தமிழில் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அயலான், இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

இந்தியளவில்

இந்தியளவில்

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என இந்தியளவில் ஏகப்பட்ட மொழி படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். கன்னடத்தில் வெளியான கில்லி படத்தில் தான் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் யுவன், தடையற தாக்க மற்றும் புத்தகம் உள்ளிட்ட படங்களில் நடித்து அறிமுகமானார்.

டாப் ஹீரோக்களுடன்

டாப் ஹீரோக்களுடன்

மகேஷ் பாபுவின் ஸ்பைடர், கார்த்தி உடன் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் தேவ், நடிகர் சூர்யாவுடன் என்ஜிகே என டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் 2 படங்களிலும் நடித்து வருகிறார்.

போதைப் பொருள் விவகாரம்

போதைப் பொருள் விவகாரம்

பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் நடைபெற்று வரும் போதைப் பொருள் வழக்கு விசாரணையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளார். தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் சிக்கியுள்ள போதைப் பொருள் விவகார வழக்கில் ரகுல் ப்ரீத் சிங்கும் சிக்கி உள்ளார்.

எவ்ளோ பெரிய காண்டம்

எவ்ளோ பெரிய காண்டம்

இந்நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் பெரிய காண்டம் கவரை கையில் கிளாப் போர்ட் போல வைத்துக் கொண்டு ரகுல் ப்ரீத் சிங் போஸ் கொடுத்துள்ள ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் ஷாக் ஆக்கி உள்ளது.

காண்டம் டெஸ்டர்

காண்டம் டெஸ்டர்

'Chhatriwali' எனும் படத்தில் Condom Tester கதாபாத்திரத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கான வித்தியாசமான விவகாரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் தற்போது வெளியாகி இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தேஜாஸ் தியோஸ்கர் என்பவர் இயக்குகிறார்.

என்ன கதை

என்ன கதை

வேதியியல் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் பெண் ஒருவர் காண்டம் டெஸ்டர் வேலையில் சேர்ந்து எப்படி பணியாற்றுகிறார் என்ன என்ன சிக்கல்களை சந்திக்கிறார் என்பதை காமெடி என்டர்டெயினர் படமாக கொடுக்க முயற்சி செய்துள்ளதாக அதன் இயக்குநர் கூறியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பித்த நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தாராள பிரபு

தாராள பிரபு

தமிழில் தாராள பிரபு என ரீமேக் செய்யப்பட்ட இந்தி படமான விக்கி டோனர் படத்தில் விந்து தானம் குறித்த சர்ச்சைக்குரிய கதையை காமெடி டிராக் கலந்து படமாக்கி இருப்பார்கள். அதே போல தான் இந்த படமும் இருக்கும் என்றும் முகம் சுளிக்கும் அளவுக்கு இருக்காது என்றும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X