தம்பியுடன் செம கிளாமராய் செல்பி எடுத்த கார்த்தி பட நடிகை.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: பிரபல நடிகையான ரகுல் பிரீத் சிங் தனது தம்பியுடன் செம கிளாமராய் எடுத்துள்ள செல்பி வைரலாகி வருகிறது.
கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக இருந்து வருகிறார்.
தமிழில் கார்த்தி, சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வருகிறார்.

இந்தியன் 2
தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், கமலின் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். மேலும் மூன்று இந்தி படங்களிலும் பிஸியாக உள்ளார் நடிகை ரகுல் பிரீத் சிங்.
தம்பிக்கு பிறந்தநாள்
இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். தனது தம்பியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவருடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார் ரகுல்.

என் சிறிய அசுரன்
மேலும் அந்த போட்டோவுக்கு, என் சிறிய அசுரனுக்கு ஹேப்பியஸ்ட் பர்த்டே.. என் இடைவிடாத பொழுதுபோக்கு, நீங்கள் வளர்ந்து உங்கள் சகோதரி சொல்லும் அனைத்தையும் கேட்க ஆரம்பிக்கலாம். அவளுக்கு நிறைய பரிசுகள் கொடுக்கலாம். உங்கள் உணவை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளலாம்!

சிறிய கிராக் பாட்
அப்புறம் நான் ஏற்கனவே செய்ததை விட அதிகமாக உன்னை நேசிப்பேன் என்று நான் உறுதியளிக்கிறேன் என் சிறிய கிராக் பாட்! எல்லாவற்றிலும் சிறந்ததை பெறு.. இவ்வாறு நடிகை ரகுல் பிரீத் சிங் தனது சகோதரருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











