எந்நேரமும் தண்ணீரிலேயே மிதக்கும் பிரபல நடிகை... சம்மர் ஸ்பெஷல்!
சென்னை : சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
படப்பிடிப்பு தொடர்ந்து நடக்குமா நடக்காதா என பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியிருக்கும் இந்தியன் 2ல் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மாலத்தீவில் சென்று அங்கு எடுத்த பல பிகினி புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை ஹாட்டாக்கியது பத்தாது என்று இப்போது சம்மர் ஸ்பெஷலாக எந்நேரமும் தண்ணீரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை குளிர்வித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக
இன்று நேற்று நாளை படத்தை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வரும் அயலான் சயின்டிஃபிக் திரைப்படம் என சொல்லப்படும் நிலையில் அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இதன் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில் இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மார்க்கெட் இருப்பதால்
தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு ஹிந்தியிலும் மிகப் பெரிய மார்க்கெட் இருப்பதால் அட்டாக், தேங்காட்,மேடே உள்ளிட்ட படங்கள் வரிசை கட்டி வெளியாக காத்துக்கொண்டிருக்க தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

கேள்விகளுக்கு உள்ளாகி
பல தடங்கல்களையும் தாண்டி பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வந்த இந்தியன்2 படப்பிடிப்பு தொடர்ந்து நடக்குமா நடக்காதா என்ற பல்வேறு கேள்விகளுக்கு உள்ளாகி இருக்க அதில் கதாநாயகியாக நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய காட்சிகள் சிலவற்றை நடித்து முடித்துள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

நீச்சல் குளத்தில் பிகினி
நேர்த்தியான நடிப்பாலும் அசரவைக்கும் கவர்ச்சியாலும் பல மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் ஏற்கனவே மாலத்தீவுக்கு சென்ற இடத்தில் செம ஹாட்டான பிகினி புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை சூடாக்கி வந்த நிலையில் இப்பொழுது சம்மர் ஸ்பெஷலாக நீச்சல் குளத்தில் பிகினி உடையில் எந்நேரமும் தண்ணீரில் நின்று கூலாக்கி கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு குளிர்வித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











