மேடையில் வைத்து புகழ்ந்த ராம்சரண்.. வெட்கப்பட்டு கன்னம் சிவந்த சின்ன மயிலு ஜான்வி கபூர்

ஹைதராபாத்: பாலிவுட்டில் பிஸியாக நடித்துவந்த நடிகை ஜான்வி கபூர் தென்னிந்திய மொழிகளிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார். முதலில் அவர் அறிமுகமான தேவரா திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. இப்போது ராம்சரணுக்கு ஜோடியாக பெட்டி படத்தில் நடித்திருக்கிறார். அடுத்த மாதம் படமானது ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் மேடையில் வைத்து ஜான்வியை ராம்சரண் புகழ்ந்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் லேடி சூப்பர் ஸ்டாராக மின்னியவர் ஸ்ரீதேவி. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அவர் முதலில் தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா உள்ளிட்டவைகளை ரூல் செய்து பிறகு ஹிந்தி சினிமாவுக்கு சென்றார். அங்கு சென்றும் தனது திறமையாலும், அழகாலும் சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தினார். அங்கு அவர் பிஸியாக இருந்தபோதே தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். போனிக்கு ஸ்ரீதேவி இரண்டாவது மனைவி. அவர்களுக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

Ram Charan Praises Janhvi Kapoor I ve Never Seen Someone So Dedicated
Photo Credit:

ஜான்வி கபூர்: துபாயில் ஒரு ஹோட்டலில் ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார். அந்த வருடத்திலேயே ஜான்வி கபூர் தடாக் என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக ஹிந்தியில் அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும்; புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை நிரூபிக்கும்வகையில் ஜான்வியின் நடிப்பு அந்தப் படத்தில் பரவலாக பேசப்பட்டது.

அடுத்தடுத்த வாய்ப்புகள்: அந்தப் படத்துக்கு பிறகு ஜான்வியின் நடிப்பில் ஒரு வருடம் படம் வெளியாகவில்லை. பிறகு 2020ஆம் ஆண்டு கோஸ்ட் ஸ்டோரிஸ், கஞ்சன் சக்சேனா கார்கில் கேர்ள் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அந்தப் படங்களுக்கு பிறகு தொடர்ந்து ஜான்விக்கு வாய்ப்புகள் கிடைக்க; கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு அவர் வளர ஆரம்பித்தார். இப்போது அவர் பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க ஹீரோயின்களில் ஒருவராக வலம்வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
விஜய் தங்கை பற்றி அறியாத பக்கங்கள்.. ஃபீலிங்கோடு சொன்ன அக்கா.. என்னவெல்லாம் நடந்தது?
விஜய் தங்கை பற்றி அறியாத பக்கங்கள்.. ஃபீலிங்கோடு சொன்ன அக்கா.. என்னவெல்லாம் நடந்தது?

பான் இந்தியா ஹீரோயின்: ஸ்ரீதேவி எப்படி பான் இந்தியா ஹீரோயினாக கலக்கினாரோ அதேபோல் ஜான்வியும் கலக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் அவரது தென்னிந்திய திரையுலக அறிமுகம் தெலுங்கு படத்தின் மூலம் நடந்தது. ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக அவர் நடித்திருந்த தேவரா திரைப்படம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. இப்போது ராம்சரணுக்கு ஜோடியாக பெட்டி படத்தில் நடித்திருக்கிறார்.

புகழ்ந்த ராம்சரண்: இந்நிலையில் படமானது ஜூன் நான்காம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க அப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ராம்சரண், ஜான்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய அவர், "ஜான்வி கபூர் மாதிரி ஒரு அர்ப்பணிப்புள்ள ஆளை இதுவரை நான் பார்த்ததே இல்லை. நாங்கள் கடைசியாக ஷூட் செய் த பாடலில் என்னைவிடவும் நூறு மடங்கு அவர் சிறப்பாக நடித்தார். எங்களுடைய ஜோடி ரசிகர்களை எப்போதும் ஏமாற்றாது" என்றார். இதை கேட்டு அருகில் இருந்த ஜான்வி வெட்கத்தில் கன்னம் சிவந்துபோய்விட்டார். தற்போது அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X