ஜான்வி கபூருக்கு ராம் சரண் மனைவி கொடுத்த அன்பு பரிசு.. என்ன தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் தனது வசீகரமான அழகால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். ஸ்ரீ தேவியின் மகள் என்ற அறிமுகத்தோடு சினிமாவில் அறிமுகமான ஜான்விகபூர், தற்போது, ராம்சரணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில்,ராம் சரணின் மனைவி ஜான்விக்கு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

80களில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கோலிவுட்டையே தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி சினிமாவில் இவர் ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். அதன் பின், இவர் தமிழ் சினிமாவில் தலைகாட்டவே வில்லை.

Janhvi Kapoor Ram Charan

ஸ்ரீதேவி மகள்: அம்மா போலவே சினிமா மீது ஆர்வம் கொண்ட ஜான்வி கபூர், கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் வெளியான தடக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் தனது தடத்தை பதித்தார். இவர் அறிமுகமான முதல் படமே ஜான்விக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதனைத் தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரீஸ், ரோகி, குட்லக், ஜெர்ரி, மிலி உள்ளிட்ட சில படத்தில் நடித்து வந்த ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் தனது தடத்தை பதித்தார்.

தேவாரா: கொரட்டாலா சிவா இயக்கிய இத்திரைப்படம் பான் இந்திய படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் வெளியானது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தேவாரா படம், 100% லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்தது. யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என். டி. ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும், பாலிவுட் ஸ்டார் சைப் அலி கான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சக்கோ, ஸ்ரீ காந்த், கலையரசன் உள்ளிட்ட இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.

Janhvi Kapoor Ram Charan

பரிசு கொடுத்த உபாசனா: தேவாரா திரைப்படத்தை தொடர்ந்து தற்போது, ராம் சரணின் புதிய திரைப்படமான RC16 என்ற பெயரில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், ஜெகபதி பாபு, திவ்யா, சிவராஜ் குமார் என பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து நிலையில், ஜான்வி கபூருக்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா உணவு சம்மந்தப்பட்ட சிறப்பு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். ஜான்வி கபூரை சந்தித்து உபாசனா பரிசு வழங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணின் பான் இந்தியா படமான 'கேம் சேஞ்சர்' ஜனவரி 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், வெளியான முதல் நாளே பார்வையாளர்களிடம் இருந்து எதிர்மறையான விமர்சனத்தை பெற்று படம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதனால், ராம் சரணின் ரசிகர்கள் கவலை அடைந்தனர். தற்போது ராம் சரண் RC16 படத்தின் மீது பெரும் எதிர்பாப்பு எழுந்துள்ளது. இப்படத்திற்கு பிறகு ராம் சரண் சுகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் ரங்கஸ்தலம் ரேஞ்சில் என்று நம்பப்படுகிறது. தற்போது இப்படத்தின் கதையை உருவாக்கும் பணியில் சுகுமார் ஈடுபட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X