»   »  கலாபவன் ஜோடியான ரம்பா!!

கலாபவன் ஜோடியான ரம்பா!!

Subscribe to Oneindia Tamil

தமிழ் கைவிட்டு விட, தெலுங்கு கதவை மூடி விட, கன்னடம் கண்களை மூடிக்கொள்ள, மலையாளமும், போஜ்புரியும் ரம்பாவை கை கொடுத்து தூக்கி விட்டுள்ளன.

உழவனில் அறிமுகமாகி, உள்ளத்தை அள்ளித்தா மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களைஅள்ளி முடிந்தவர் ரம்பா. புல் தடுக்கி பயில்வான்கள் கூட ரம்பாவின் தொடை அழகில்சிக்கித் தடுமாறி தத்தளித்துப் போனார்கள்.

வந்த வேகத்தில் புகழின் உச்சிக்குப் போன ரம்பா, முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு சொக்க வைத்தார். ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடனும், விஜய்,அஜீத் என இளசுகளுடனும் சரமாரியாக ஜோடியாக நடித்தவர் ரம்பா.

புதுவரவுகளின் படையெடுப்பால் வாய்ப்பு குறைந்த ரம்பா, அண்ணன் வாசுவின்ஆலோசனையைக் கேட்டு ஏகப்பட்ட கடன்களை வாங்கி த்ரீ ரோஸஸ் என்ற படத்தைஎடுத்தார். போண்டியம்மா ஆனார்.

அந்தப் படம் கொடுத்த அடியிலிருந்து இன்னும் கூட மீளவில்லை ரம்பா. இந்தஅலைச்சலில் தமிழில் சுத்தமாகி விட இந்திக்குப் போனார். அங்கு கோவிந்தாபுண்ணியத்தில் துண்டு துக்கடா வேடங்களில் நடித்த வந்தார். அப்படியே மிதுன்சக்கரவர்த்தியின் நட்பு கிடைத்து பெங்காலி மொழிப் படம் ஒன்றிலும் தலைகாட்டினார்.

இதுவும் குறைந்து போன நேரத்தில்தான் போஜ்புரிகாரர்கள் வந்து ரம்பாவை தங்களதுபடத்தில் நடிக்க கூப்பிட்டனர். இப்போது போஜ்புரியில் ரம்பாவும் ஒரு முக்கியநடிகையாம்.

போஜ்புரி கை கொடுத்த நேரமோ என்னவோ மலையாளத்திலும் ஒரு படம்வந்துள்ளது ரம்பாவுக்து. இதில் அவரது ஜோடி வில்லன்-காமெடியனான கலாபவன்மணி. படத்தின் பெயர் பாயும் புலி.

புலியில் என்ன வேடம், கவர்ச்சிப் புலியா என்று வாயைக் கிண்டினோம். கேரக்டரைசொல்லக்கூடாது. முக்கியமான வேடம். படம் வெளியே வந்தால் நல்ல பெயர்கிடைக்கும் என்று சிரித்து வைத்தார் ரம்பா.

மறுபடியும் படம் எடுப்பீங்களா என்று கேட்டால், ரம்பாவின் கண்களில் ஒரு பிளாஷ்ஏற்பட்டு (பிளாஷ்பேக்கோ?) மறைந்தது. இப்போதெல்லாம் பெரிய பட்ஜெட்படங்கள்தான் வருகின்றன.

ஆனால் எல்லாப் படமும் ஓடி விடுவதில்லை. பல படங்கள் படுத்துள்ளன. ஆனால்சிறு பட்ஜெட் படங்கள்தான் அதிக வசூலைக் கொடுக்கின்றன.

மலையாளம் மற்றும் கன்னடப் படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். நான் த்ரீரோஸஸ் படத்தைத் தயாரித்து பெரிய நஷ்டத்தை சந்தித்தேன். அந்த அனுபவமேஇன்னும் பசுமையாக இருக்கிறது. அடுத்த படம் தயாரிக்கும் எண்ணமே இல்லைஎன்று சொல்லி முடித்தார் ரம்பா.

மறுபடியும் எதுக்குப்பா வம்பு!

Read more about: ramba acts in malayalam film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil