ஹீரோயின்
அநாயசமான நடிப்பாற்றலையும் (?) அபரிமிதமான தொடைகளையும் வைத்து ரசிகக் கண்மனிகளை ரம் அடித்ததுபோல் ஆடவிட்டவர் ரம்பா.
இவருக்கு இப்போது அவ்வளவாக படங்கள் இல்லாததால் படத் தயாரிப்பில் இறங்குகிறாராம்.
இதில் என்ன விசேஷம் என்றால் அது ஹீரோவே இல்லாத மெகா படமாம்.
அதுவும் மூன்று ஹீரோயின் சப்ஜெக்டாம்.
அதில் ஒருவர் - ஏறத்தாழ எல்லா பாடல்களுக்கும் கைகளை மேலே தூக்கிக் கொண்டே அம்சமாக டான்ஸ் செய்யும்சிம்ரன்.
மற்றொருவர் - ஜவுளிக்கடை பொம்மை போல "கொழுக் மொழுக்"கென காட்சியளிக்கும் லைலா.
மூன்றாவது சிங்காரி வேறு யாரு நம்ம ரம்ஸ் தான்.
படத்தின் பெயர் "த்ரீ ரோசஸ்".
மூன்று ரோஸ்களும் சேர்ந்து ரசிகர்களைத் திக்குமுக்காட வைக்கப் போகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











