»   »  வந்தாரய்யா ரம்பா!

வந்தாரய்யா ரம்பா!

Subscribe to Oneindia Tamil

தொடையழகி ரம்பா மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பியுள்ளார்.

உள்ளத்தை அள்ளித்தா மூலம் அதிரடியாய் தமிழ் ரசிகர்களை நிலை குலையச்செய்தவர் சென்றவர் ரம்பா. படு வேகமாக முன்னேறிய ரம்பா, அவரது காலத்தில்நடித்துக் கொண்டிருந்த அத்தனை நடிகைகளையும் தொடையாட்டம் காண வைத்தார்.

கமல், ரஜினி என சூப்பர் ஸ்டார்களில் தொடங்கி சின்ன வயசு நாயகர்கள் அத்தனைபேருடனும் அட்டகாச ஆட்டம் போட்டவர் ரம்பா. முன்னணியில் திகழ்ந்தபோதுதேவையில்லாமல் த்ரீ ரோஸஸ் என்ற படத்தை சொந்தமாக எடுத்து கையை சுட்டுக்கொண்டார்.

அந்தப் படம் கொடுத்த அடியிலிருந்து அவரால் கடைசி வரை மீளவே முடியவில்லை.மார்க்கெட்டும் போண்டியாகி விட்டது. வினை முற்றிப் போய் அரசியலிலும் தலைகாட்டினார் ரம்பா. அது புண்ணை மேலும் கிளறி விட்டது போலாகி விட்டது.


இதனால் தமிழில் சுத்தமாக வாய்ப்பிழந்து, கடன் தொல்லையும் அதிகரித்துகோர்ட்டுக்கும், வீட்டுக்குமாக அலைய ஆரம்பித்தார். பைனான்சியர் அன்புச் செழியன்போட்ட வழக்குகளிலிருந்து இன்னும் கூட அவரால் மீள முடியவில்லை.

அவருக்கு இத்தனை காலமாக அன்பும், ஆதரவும் தெரிவித்து வந்த இந்தி நடிகர்கோவிந்தாவும் இப்போது ரம்பாவை கைவிட்டு விட்டதாக கூறுகிறார்கள். இதனால்பண இருப்பு குறைந்து போய் மீண்டும் தீவிரமாக நடிப்புக்குத் திரும்பியுள்ளார் ரம்பா.

இப்போது போஜ்பூரி மொழி படங்களில் நடித்தபடியே தமிழிலும் மீண்டும்நுழைந்துள்ளார்.

ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தில் ரம்பா நடித்து வருகிறார். பழைய பொலிவுதிரும்ப வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து ஊளைச் சதையை குறைத்துஎழிலைக் கூட்டியுள்ளாராம்.


மீண்டும் ஒரு கட்டு கட்டுவேன், அதற்கான தகுதியும், திறமையும் என்னிடம் இன்னும்உள்ளது என்று தெம்பா கூறுகிறார் ரம்பா.

ரம்பாவுக்கு முன்பு போல ரசிகர்களின் ஆதரவு இருக்குமா என்பதை ஒரு காதலன் ஒருகாதலி தான் நிரூபிக்க வேண்டும்.

Read more about: ramba is back in kollywood
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil