ஏமாற்றிய காதலன்.. திருமணம் செய்து கொள்ளாமே வாழும் ‘ரம்பா ஹோ ‘ புகழ் கல்பனா ஐயரின் கண்ணீர் கதை!
சென்னை: கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் தலைமுடி எல்லாம் நரைத்து, பட்டுபுடவையில் 'ரம்பா ஹோ சம்பா ஹோ' என ஆடி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டார். இந்த காலத்து இளசுகளே வாயை பிளந்து நின்று, அட யாரு டா இந்த பாட்டி என கேட்கும் அளவிற்கு அந்த நடனம் இருந்தது. அந்த செய்தியில் யார் அந்த பாட்டி என்பதை பார்க்கலாம்.
கல்பனா ஐயர்: மாடல், நடிகை, மிஸ் இந்தியா, டான்சர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் தான் இந்த கல்பனா ஐயர். 1981 ஆம் ஆண்டு வெளியான 'அர்மான்' என்கிற திரைப்படத்தில் பாடல் தான் 'ரம்பா ஹோ சம்பா ஹோ' என்கிற பாடல். அந்த காலத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பாடலாக இருந்தது. அந்த பாட்டில் கல்பனா ஐயர் தான் நடனம் ஆடி இருந்தார். அந்த பாடல் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு பின் ரன்பீர் சிங், சாரா அர்ஜுன் நடித்த துரந்தர் படத்தில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. இதனால், சோசியல் மீடியாவில் 'ரம்பா ஹோ சம்பா ஹோ' என்ற பாடல் மீண்டும் வைரலானது. அதைத்தொடர்ந்து, அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த பாடலுக்கு, கல்பனா ஐயர் மேடையில் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

மிஸ் இந்தியா ரன்னரப்: தமிழ்நாட்டில் பிறந்த கல்பனா ஐயர், சினிமாவில் நிலையான ஒரு இடத்தை பிடிப்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். தனது 12 வயதிலேயே குடும்பம் கஷ்டம் காரணமாக கிடைத்த வேலைகளை செய்து வந்தார். இவருக்கு நடனத்தின் மீது ஈடுபாடு அதிகமாகவே இருந்தது. ஆனால், நடனபள்ளியில் சேருக்கு அளவிற்கு பணம் இல்லாததால் பள்ளிக்கூடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து நடனத்தை கற்றுக்கொண்டார். அப்படி ஒரு கலை நிகழ்ச்சியில் நடனமாடியதன் மூலமாகத்தான் கல்பனா ஐயருக்கு, பெரிய நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து பல கட்ட முயற்சிக்கு பிறகு 1978 மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு ரன்னரப்பானார். இதையடுத்து, கல்பனாவிற்கு பாலிவுட் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வச்சுக்கவா உன்னை மட்டும் : சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த கல்பனாவிற்கு 'அர்மான்' திரைப்படத்தில் 'ரம்பா ஹோ சம்பா ஹோ' பாடல் கல்பனா ஐயரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை பாடலாக அமைந்து அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ள கல்பனா பெரும்பாலும் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி உள்ளார். பாலிவுட்டில் கலக்கி வந்த இவர், ரஜினிகாந்துடன் 'நல்லவனுக்கு நல்லவன்' படம் 'வச்சுக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள' என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார். அந்த பாடலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று தமிழிலும் கல்பனா ஐயர் பிரபலமானார்.

காதல் தோல்வி: ஐட்டம் பாடல்கள் மூலம் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த கல்பனா ஐயர், வில்லன் நடிகர் அம்ஜித் கானை காதலித்து அவருடன் சில ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ஆனால், அந்த காதல் கை கூடாததால், மனம் நொந்துபோன கல்பனா, சினிமாவை விட்டு விலகி 90 கால கட்டத்திலேயே துபாயில் செட்டிலாகிவிட்டார். துபாயில் சென்றாலும் அம்ஜித் கானை மறக்க முடியாமல் தவித்த கல்பனா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமலே உள்ளார். அண்மையில் இவர், திருமண விழாவில் கலந்து கொண்ட போது தான், இந்தப் பாடலுக்கு மீண்டும் நடனமாடி, டாக் ஆஃப் தி வேர்டாகி உள்ளார். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த வயதிலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு 70 வயது கல்பனா ஐயர் ஒரு எடுத்துக்காட்டு.


Click it and Unblock the Notifications











