»   »  மீண்டு(ம்) வந்த ரம்பா கடன் தொல்லைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் ரம்பா, சில வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தில் நடிக்கஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.தமிழ் ரசிகர்களை ஒரு காலத்தில் தனது தொடை அழகாலேயே கிறங்கடித்தவர் ரம்பா. கார்த்திக்கில் தொடங்கி அஜித், விஜய்,என முன்னேறி உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமலுடன் வரை நடித்து கோலிவுட்டில் முடிசூடா ராணியாக வலம் வந்துகொண்டிருந்தார்.ஆனால் துரதிர்ஷ்டம் யாரைத் தான் விட்டது? சொந்தப் படம் எடுத்தால் இன்னும் நாலு காசு பார்க்கலாம் என்று யாரோவேண்டாதவர்கள் கொடுத்த ஆலோசனையை நம்பி த்ரீ ரோஸஸ் எடுத்தார்.இந்தப் படத்தில் ஆரம்பித்தது ரம்பாவின் துரதிர்ஷ்டம். படம் வந்த வேகத்திலேயே ஊத்திக் கொள்ள, ரம்பாவுக்கு சனி திசைஆரம்பமானது. கடனை அடைக்க கடன் மேல் கடன் வாங்கத் தொடங்கினார்.அது வட்டி மேல் வட்டியானது. கடன்காரர்கள் நெருக்க, உடனே தனது சில நண்பர்களை அணுகி தனக்கு உதவுமாறு கேட்டார்.ஆனால் அவருக்கு யாரும் உதவவில்லை. த்ரீ ரோஸஸ் படத்தில் நடித்த ஜோதிகாவிடம் கேட்டுப் பார்த்தார் ரம்பா. ஆனாலும்அவரும் நைசாக கழண்டு கொண்டார்.கடன்காரர்களுக்கு கொடுத்த செக்குகள் திரும்பி வர, ரம்பாவும் கோர்ட்டு வாசலை மிதிக்க ஆரம்பித்தார். வாய்ப்புகளும் மங்க,மெதுவாக கோலிவுட்டை விட்டு ஒதுங்க ஆரம்பித்தார் ரம்பா. நெருக்கடியை சமாளிக்க சுள்ளானில் ஒத்தப் பாட்டுக்கு வந்து போனார். மேலும் வங்காளம், இந்தி என சில மொழிகளிலும்நடித்து காலத்தை ஓட்டி வந்தார்.இதோ, இப்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ரம்பாவுக்கு தமிழில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்வ சாயிபிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்கிறார்.இந்தப் படத்தை இயக்குபவர் செல்வேந்திரன். புதுமுகம் தான் என்றாலும் திறமையானவர். ஏனென்றால் இவர் ஷங்கரிடம்அசிஸ்டண்டாக இருந்திருக்கிறாராம்.நீண்ட இடைவேளைக்குப் பிறகு செட்டில் பார்த்த சந்தோஷத்துடன், அவரிடம் துக்கம் விசாரித்தோம்... சில ஆண்டுகளுக்குப்பிறகு தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன். கடன் தொல்லை, நீதிமன்ற வழக்கு என பல பிரச்சினைகளில் சிக்கிய போதும், கண்டகண்ட படங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை.இப்போது நான் ஒப்புக் கொண்டுள்ள ஒரு காதலன் காதலி படத்தில் நல்ல கதை, எனக்கும் நல்ல ரோல். டைரக்டர்செல்வேந்திரனும் திறமையானவர். அதனால் தான் இந்தப் படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன் என்ற ரம்பாவிடம் கடன்தொல்லையிலிருந்து தப்பிக்கத் தான் இந்தப் படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டோம்.பணத்திற்காக என்றால் சுக்ரனில் ஒரு பாட்டுக்கு ஆடியதைப் போல ஏழெட்டு படங்களில் என்னால் ஆடியிருக்க முடியும். இந்தஇடைவெளியிலும் இந்தியில் 3, கன்னடத்தில் 2, வங்காளம், தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்துள்ளேன் என்றார்.இந்தப் படத்தில் கவர்ச்சி சற்று தூக்கலாக இருக்கும் என்று பேசப்படுகிறதே என்று ஒன்றும் தெரியாதது போல கேட்டோம்.இந்தப் படத்தில் கவர்ச்சி இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அது ஆபாசமாக இருக்காது (இரண்டுக்கும் என்ன சாமிவித்தியாசம்?) வழக்கமாக எல்லோரும் சொல்வதைப் போலவே ரம்பாவும் சொன்னார்.எப்படியோ மீண்டு(ம்) வந்து விட்டார் ரம்பா!

மீண்டு(ம்) வந்த ரம்பா கடன் தொல்லைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் ரம்பா, சில வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தில் நடிக்கஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.தமிழ் ரசிகர்களை ஒரு காலத்தில் தனது தொடை அழகாலேயே கிறங்கடித்தவர் ரம்பா. கார்த்திக்கில் தொடங்கி அஜித், விஜய்,என முன்னேறி உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமலுடன் வரை நடித்து கோலிவுட்டில் முடிசூடா ராணியாக வலம் வந்துகொண்டிருந்தார்.ஆனால் துரதிர்ஷ்டம் யாரைத் தான் விட்டது? சொந்தப் படம் எடுத்தால் இன்னும் நாலு காசு பார்க்கலாம் என்று யாரோவேண்டாதவர்கள் கொடுத்த ஆலோசனையை நம்பி த்ரீ ரோஸஸ் எடுத்தார்.இந்தப் படத்தில் ஆரம்பித்தது ரம்பாவின் துரதிர்ஷ்டம். படம் வந்த வேகத்திலேயே ஊத்திக் கொள்ள, ரம்பாவுக்கு சனி திசைஆரம்பமானது. கடனை அடைக்க கடன் மேல் கடன் வாங்கத் தொடங்கினார்.அது வட்டி மேல் வட்டியானது. கடன்காரர்கள் நெருக்க, உடனே தனது சில நண்பர்களை அணுகி தனக்கு உதவுமாறு கேட்டார்.ஆனால் அவருக்கு யாரும் உதவவில்லை. த்ரீ ரோஸஸ் படத்தில் நடித்த ஜோதிகாவிடம் கேட்டுப் பார்த்தார் ரம்பா. ஆனாலும்அவரும் நைசாக கழண்டு கொண்டார்.கடன்காரர்களுக்கு கொடுத்த செக்குகள் திரும்பி வர, ரம்பாவும் கோர்ட்டு வாசலை மிதிக்க ஆரம்பித்தார். வாய்ப்புகளும் மங்க,மெதுவாக கோலிவுட்டை விட்டு ஒதுங்க ஆரம்பித்தார் ரம்பா. நெருக்கடியை சமாளிக்க சுள்ளானில் ஒத்தப் பாட்டுக்கு வந்து போனார். மேலும் வங்காளம், இந்தி என சில மொழிகளிலும்நடித்து காலத்தை ஓட்டி வந்தார்.இதோ, இப்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ரம்பாவுக்கு தமிழில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்வ சாயிபிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்கிறார்.இந்தப் படத்தை இயக்குபவர் செல்வேந்திரன். புதுமுகம் தான் என்றாலும் திறமையானவர். ஏனென்றால் இவர் ஷங்கரிடம்அசிஸ்டண்டாக இருந்திருக்கிறாராம்.நீண்ட இடைவேளைக்குப் பிறகு செட்டில் பார்த்த சந்தோஷத்துடன், அவரிடம் துக்கம் விசாரித்தோம்... சில ஆண்டுகளுக்குப்பிறகு தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன். கடன் தொல்லை, நீதிமன்ற வழக்கு என பல பிரச்சினைகளில் சிக்கிய போதும், கண்டகண்ட படங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை.இப்போது நான் ஒப்புக் கொண்டுள்ள ஒரு காதலன் காதலி படத்தில் நல்ல கதை, எனக்கும் நல்ல ரோல். டைரக்டர்செல்வேந்திரனும் திறமையானவர். அதனால் தான் இந்தப் படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன் என்ற ரம்பாவிடம் கடன்தொல்லையிலிருந்து தப்பிக்கத் தான் இந்தப் படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டோம்.பணத்திற்காக என்றால் சுக்ரனில் ஒரு பாட்டுக்கு ஆடியதைப் போல ஏழெட்டு படங்களில் என்னால் ஆடியிருக்க முடியும். இந்தஇடைவெளியிலும் இந்தியில் 3, கன்னடத்தில் 2, வங்காளம், தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்துள்ளேன் என்றார்.இந்தப் படத்தில் கவர்ச்சி சற்று தூக்கலாக இருக்கும் என்று பேசப்படுகிறதே என்று ஒன்றும் தெரியாதது போல கேட்டோம்.இந்தப் படத்தில் கவர்ச்சி இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அது ஆபாசமாக இருக்காது (இரண்டுக்கும் என்ன சாமிவித்தியாசம்?) வழக்கமாக எல்லோரும் சொல்வதைப் போலவே ரம்பாவும் சொன்னார்.எப்படியோ மீண்டு(ம்) வந்து விட்டார் ரம்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடன் தொல்லைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் ரம்பா, சில வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தில் நடிக்கஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் ரசிகர்களை ஒரு காலத்தில் தனது தொடை அழகாலேயே கிறங்கடித்தவர் ரம்பா. கார்த்திக்கில் தொடங்கி அஜித், விஜய்,என முன்னேறி உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமலுடன் வரை நடித்து கோலிவுட்டில் முடிசூடா ராணியாக வலம் வந்துகொண்டிருந்தார்.

ஆனால் துரதிர்ஷ்டம் யாரைத் தான் விட்டது? சொந்தப் படம் எடுத்தால் இன்னும் நாலு காசு பார்க்கலாம் என்று யாரோவேண்டாதவர்கள் கொடுத்த ஆலோசனையை நம்பி த்ரீ ரோஸஸ் எடுத்தார்.

இந்தப் படத்தில் ஆரம்பித்தது ரம்பாவின் துரதிர்ஷ்டம். படம் வந்த வேகத்திலேயே ஊத்திக் கொள்ள, ரம்பாவுக்கு சனி திசைஆரம்பமானது. கடனை அடைக்க கடன் மேல் கடன் வாங்கத் தொடங்கினார்.

அது வட்டி மேல் வட்டியானது. கடன்காரர்கள் நெருக்க, உடனே தனது சில நண்பர்களை அணுகி தனக்கு உதவுமாறு கேட்டார்.ஆனால் அவருக்கு யாரும் உதவவில்லை. த்ரீ ரோஸஸ் படத்தில் நடித்த ஜோதிகாவிடம் கேட்டுப் பார்த்தார் ரம்பா. ஆனாலும்அவரும் நைசாக கழண்டு கொண்டார்.

கடன்காரர்களுக்கு கொடுத்த செக்குகள் திரும்பி வர, ரம்பாவும் கோர்ட்டு வாசலை மிதிக்க ஆரம்பித்தார். வாய்ப்புகளும் மங்க,மெதுவாக கோலிவுட்டை விட்டு ஒதுங்க ஆரம்பித்தார் ரம்பா.


நெருக்கடியை சமாளிக்க சுள்ளானில் ஒத்தப் பாட்டுக்கு வந்து போனார். மேலும் வங்காளம், இந்தி என சில மொழிகளிலும்நடித்து காலத்தை ஓட்டி வந்தார்.

இதோ, இப்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ரம்பாவுக்கு தமிழில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்வ சாயிபிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை இயக்குபவர் செல்வேந்திரன். புதுமுகம் தான் என்றாலும் திறமையானவர். ஏனென்றால் இவர் ஷங்கரிடம்அசிஸ்டண்டாக இருந்திருக்கிறாராம்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு செட்டில் பார்த்த சந்தோஷத்துடன், அவரிடம் துக்கம் விசாரித்தோம்... சில ஆண்டுகளுக்குப்பிறகு தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன். கடன் தொல்லை, நீதிமன்ற வழக்கு என பல பிரச்சினைகளில் சிக்கிய போதும், கண்டகண்ட படங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை.

இப்போது நான் ஒப்புக் கொண்டுள்ள ஒரு காதலன் காதலி படத்தில் நல்ல கதை, எனக்கும் நல்ல ரோல். டைரக்டர்செல்வேந்திரனும் திறமையானவர். அதனால் தான் இந்தப் படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன் என்ற ரம்பாவிடம் கடன்தொல்லையிலிருந்து தப்பிக்கத் தான் இந்தப் படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டோம்.

பணத்திற்காக என்றால் சுக்ரனில் ஒரு பாட்டுக்கு ஆடியதைப் போல ஏழெட்டு படங்களில் என்னால் ஆடியிருக்க முடியும். இந்தஇடைவெளியிலும் இந்தியில் 3, கன்னடத்தில் 2, வங்காளம், தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்துள்ளேன் என்றார்.

இந்தப் படத்தில் கவர்ச்சி சற்று தூக்கலாக இருக்கும் என்று பேசப்படுகிறதே என்று ஒன்றும் தெரியாதது போல கேட்டோம்.இந்தப் படத்தில் கவர்ச்சி இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அது ஆபாசமாக இருக்காது (இரண்டுக்கும் என்ன சாமிவித்தியாசம்?) வழக்கமாக எல்லோரும் சொல்வதைப் போலவே ரம்பாவும் சொன்னார்.

எப்படியோ மீண்டு(ம்) வந்து விட்டார் ரம்பா!

Read more about: ramba comes again

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil