மலையாளத்துக்குத் தாவும் ரம்பா! தமிழில் அறவே வாய்ப்பிழந்து போன ரம்பா, இந்தி, வங்க மொழிப் படங்களில் தலை காட்டிப் பார்த்தார். ஒன்றும்சரிப்படாததால், மலையாளப் படவுலகம் பக்கம் தனது பார்வையத் திருப்பியுள்ளார்.உள்ளத்தை அள்ளித்தா மூலம் ரசிகர்களிடம் கவர்ச்சியை அள்ளிக் கொட்டி ரம்பா படு வேகமாக முன்னேறி பல முன்னணிஹீரோயின்களை பின்னுக்குத் தள்ளினார். ரம்பாவின் கிளாமர் அலைக்கு முன்னால் மற்ற நடிகைகள் தடுமாறித்தான் போனார்கள்.தனது உடல் வனப்பாலும், தொடை அழகாலும் ரசிகர்களின் உள்ளங்களை நொறுங்கச் செய்த ரம்பா, இளம் நடிகைகளின்படையெடுப்பாலும், காசோலை மோசடி தொடர்பான தொடர் வழக்குகளாலும், தேவையில்லாத அரசியல் பிரவேசத்தாலும் படவாய்ப்புகளை இழந்தார்.வழக்குகளிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத ரம்பா, நண்பர் கோவிந்தாவின் புண்ணியத்தால் சில இந்திப் படங்களில் சிங்கிள்பாட்டுக்கு ஆட்டம் போட்டார். அப்படியே மிதுன் சக்ரவர்த்தியின் நட்பைப் பெற்று அவருடன் வங்க மொழிப் படம் ஒன்றிலும்நடித்தார் (ரஜினியின் அண்ணாமலைப் படத்தின் ரீமேக் படம்).அப்படியும் இப்படியுமாக ஊசலாடி வரும் ரம்பாவுக்கு, இப்போது தமிழில் ஒரே ஒரு படம்தான் உள்ளது. ஒரு காதலன் ஒரு காதலிஎன்ற அந்தப் படத்தில் ரம்பா மட்டும் தனியாக நடிக்கவில்லை. கூடவே லஷ்மி ராயும் நடிக்கிறார். ரம்பாவின் கவர்ச்சி பெரியஅளவில் எடுபடாது என்ற சந்தேகத்தில் லஷ்மியையும் போட்டுள்ளார்கள்.தமிழில் இனிமேல் பெரிய அளவில் வாய்ப்புகள் தேறாது என்ற தீர்மானத்துக்கு வந்து விட்ட ரம்பா தனது பார்வையைமலையாளத்தின் பக்கம் திருப்பியுள்ளார். அவரது முயற்சியால் சமீபத்தில் திலீப்புடன் ரசிகன் என்ற படத்தில் நடித்தார். என்னவேடம் தெரியுமா? கல்லூரி மாணவி வேடம்!

By Staff

தமிழில் அறவே வாய்ப்பிழந்து போன ரம்பா, இந்தி, வங்க மொழிப் படங்களில் தலை காட்டிப் பார்த்தார். ஒன்றும்சரிப்படாததால், மலையாளப் படவுலகம் பக்கம் தனது பார்வையத் திருப்பியுள்ளார்.

உள்ளத்தை அள்ளித்தா மூலம் ரசிகர்களிடம் கவர்ச்சியை அள்ளிக் கொட்டி ரம்பா படு வேகமாக முன்னேறி பல முன்னணிஹீரோயின்களை பின்னுக்குத் தள்ளினார். ரம்பாவின் கிளாமர் அலைக்கு முன்னால் மற்ற நடிகைகள் தடுமாறித்தான் போனார்கள்.

தனது உடல் வனப்பாலும், தொடை அழகாலும் ரசிகர்களின் உள்ளங்களை நொறுங்கச் செய்த ரம்பா, இளம் நடிகைகளின்படையெடுப்பாலும், காசோலை மோசடி தொடர்பான தொடர் வழக்குகளாலும், தேவையில்லாத அரசியல் பிரவேசத்தாலும் படவாய்ப்புகளை இழந்தார்.

வழக்குகளிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத ரம்பா, நண்பர் கோவிந்தாவின் புண்ணியத்தால் சில இந்திப் படங்களில் சிங்கிள்பாட்டுக்கு ஆட்டம் போட்டார். அப்படியே மிதுன் சக்ரவர்த்தியின் நட்பைப் பெற்று அவருடன் வங்க மொழிப் படம் ஒன்றிலும்நடித்தார் (ரஜினியின் அண்ணாமலைப் படத்தின் ரீமேக் படம்).


அப்படியும் இப்படியுமாக ஊசலாடி வரும் ரம்பாவுக்கு, இப்போது தமிழில் ஒரே ஒரு படம்தான் உள்ளது. ஒரு காதலன் ஒரு காதலிஎன்ற அந்தப் படத்தில் ரம்பா மட்டும் தனியாக நடிக்கவில்லை. கூடவே லஷ்மி ராயும் நடிக்கிறார். ரம்பாவின் கவர்ச்சி பெரியஅளவில் எடுபடாது என்ற சந்தேகத்தில் லஷ்மியையும் போட்டுள்ளார்கள்.

தமிழில் இனிமேல் பெரிய அளவில் வாய்ப்புகள் தேறாது என்ற தீர்மானத்துக்கு வந்து விட்ட ரம்பா தனது பார்வையைமலையாளத்தின் பக்கம் திருப்பியுள்ளார். அவரது முயற்சியால் சமீபத்தில் திலீப்புடன் ரசிகன் என்ற படத்தில் நடித்தார். என்னவேடம் தெரியுமா? கல்லூரி மாணவி வேடம்!

அப்படம் சுமாராக ஓடியதால் தெம்படைந்த ரம்பா, தொடர்ந்து மலையாளத்திலேயே நடிக்க முடிவு செய்துள்ளார். தற்போது அவர்இன்னொரு மலையாளப் படத்திலும் புக் ஆகியுள்ளார். என்ன திடீர்னு மலையாளப் பக்கம் என்று அவரிடம் கேட்டபோது, எனதுதிரையுலக வாழ்க்கையில் இப்போது சறுக்கல் அத்தியாயம். தெலுங்கில் மட்டுமே நான் தொடர்ந்து நடித்து வந்தேன்.

அப்போது மலையாளம்தான் எனக்குக் கை கொடுத்தது. ரசிகன் படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. எனவேதொடர்ந்து மலையாளப் படங்களில் நடிக்க முடிவு செய்து விட்டேன். முன்பே நான் நிறைய மலையாளப் படங்களில்நடித்திருப்பேன். ஆனால் தமிழ், தெலுங்கில் பிசியாக இருந்ததால் முடியவில்லை.


கிளாமர் கேரக்டர்களில் நடித்த நீங்கள் எப்படி மலையாளத்தில் தாக்குப் பிடிக்க முடியும்?

அப்படியெல்லாம் இல்லை. நான் அநாவசியாக கிளாமர் காட்டியதில்லை. தேவைப்பட்டால் மட்டுமே கிளாமர் காட்டுவேன்.மலையாளத்திலும் அப்படித்தான். கிளாமர் தேவைப்பட்டால் நிச்சயம் அதுபோல நடிப்பேன்.

எனது திறமை இன்னும் அப்படியேதான் உள்ளது. எனது இடமும் அப்படியேதான் உள்ளது. என்னை நிரூபித்த பிறகுதான்கல்யாணம், காட்சியெல்லாம் என்கிறார் ரம்பா படு உறுதியாக.

ஆல் தி பெஸ்ட்!

Read more about: rambha goes to malayalam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X