கணவர் பிறந்த நாளில் விவாகரத்து என செய்தி பரப்புவதா? - குமுறும் ரம்பா

By Shankar

சென்னை: என் கணவருடன் விவாகரத்து என்று தப்புத் தப்பாய் தகவல் பரப்புகிறார்கள். நான்குமணி நேரத்துக்கு முன்புதான் என்னிடம் சொல்லிவிட்டு ஆபீஸ் போனார். அதற்குள் விவாகரத்து என்கிறார்களே.., என்றார் நடிகை ரம்பா.

பிரபல நடிகை ரம்பாவும் கனடா தொழிலதிபர் இந்திரனுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இப்போது இருவருக்கும் ஒன்றரை வயதில் லாவண்யா என்ற மகள் இருக்கிறாள்.

கணவர் இந்திரன், மகள் லாண்யாவுடன் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் வசித்து வருகிறார் ரம்பா.

இந்த நிலையில், ரம்பா, தனது கணவர் இந்திரனை விவாகரத்து செய்துகொண்டதாக இணையதளங்களில் தகவல் பரவியது.

தகவல் அறிந்ததும் பதறிய ரம்பா அளித்துள்ள விளக்கம்:

நான், என் கணவர் இந்திரன், மகள் லாண்யாவுடன் கனடாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்று எனது கணவர் இந்திரனுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் நான், என் கணவர் இந்திரனை விவாகரத்து செய்துவிட்டதாக இணையதளம் மூலம் வதந்தியை பரப்பியிருக்கிறார்கள்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இப்படியெல்லாம் விளையாடக்கூடாது. எனது கணவர் நான்கு மணி நேரத்துக்கு முன்புதான் வீட்டிலலிருந்து அவருடைய அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார். நான்கு மணி நேரத்துக்குள் நாங்கள் விவாகரத்து செய்து கொண்டதாக பொய்யான தகவலை பரப்பியிருக்கிறார்கள்.

இதுபற்றி நான், என் கணவரிடம் ஆதங்கத்துடன் பேசியபோது, அவர் எனக்கு தைரியம் சொன்னார். 'இது போன்ற வதந்திகளையெல்லாம் கண்டு கொள்ளாதே, அலட்சியப்படுத்திவிடு' என்று கூறினார். எனக்கு நல்ல மனைவியும், அழகான குழந்தையும், செழிப்பான வியாபாரமும் இருக்கிறது. இதை விட ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும் என்று அவர் கேட்கிறார்.

நான் பயந்த சுபாமுள்ள பெண் அல்ல. வதந்திகளை பார்த்து கவலைப்படமாட்டேன். இருப்பினும், தமிழ்நாட்டில் உள்ள என் நலம் விரும்பிகளுக்காகவும், ரசிகர்களுக்காகவும் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்," என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X