வருங்காலக் கணவருடன் காஞ்சி கோயிலில் நடிகை ரம்பா!

By Staff

Ramba and Indiran
தனது வருங்காலக் கணவர் இந்திரனுடன் நடிகை ரம்பா காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றார். தனது கல்யாணப் பத்திரிகையை சாமியின் காலடியில் வைத்து பூஜை செய்தார்.

நடிகை ரம்பாவுக்கும், கனடா மேஜிக்வுட்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் இந்திரன் என்கிற இந்திரகுமார் பத்மநாதனுக்கும் வருகிற 8-ந்தேதி காலை திருப்பதி திருமலையில் திருமணம் நடக்கிறது.

இந்த திருமணத்துக்கான அழைப்பிதழின் முதல் பிரதியை காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்வதற்காக நேற்று ரம்பாவும் இந்திரனும் காஞ்சிபுரம் சென்றனர்.

அவர்களுடன் ரம்பாவின் தாய் உஷாராணி மற்றும் அவரது குடும்பத்தினர், ன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் நேற்று காலை காஞ்சீபுரம் வந்தனர். காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற அவர்களை கோவில் அர்ச்சகர் நடனம் சாஸ்திரி வரவேற்று, கோவிலுக்குள் அழைத்துச்சென்றார்.

பிறகு நடிகை ரம்பா, திருமண அழைப்பிதழை அர்ச்சகரிடம் கொடுத்தார். அம்மன் காலடியில் வைத்து அர்ச்சனை செய்யப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் ரம்பா பேசுகையில், "திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதா இல்லையா என்பதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

நான் சீரியல்களிலெல்லாம் நடிக்கமாட்டேன். 2 மாதத்திற்கு முன்பு காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து அம்பாளை தரிசித்தேன். அம்மன் கழுத்திலிருந்த மாலையை எனக்கு போட்டனர்.

அப்போது மாலையுடன் தாலிக்கயிறும் வந்தது. அப்போதிலிருந்து அம்பாள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு தான் எனது திருமணமும் அம்பாள் அருளால் நிச்சயிக்கப்பட்டுள்ளது... " என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X