'நம்ம ரம்பா சார்..' குழந்தைகளுடன் 'அழகிய லைலா'வின் அசத்தல் போஸ்! லைக்ஸ் அள்ளும் க்யூட் போட்டோஸ்!
சென்னை: நடிகை ரம்பா, தனது குழந்தைகளுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகரள் பாராட்டியுள்ளனர்.
Recommended Video
தமிழில், கார்த்திக்கின் உள்ளைத்தை அள்ளித்தா, அர்ஜுனின் செங்கோட்டை, சுந்தர புருஷன், ரஜினியின் அருணாச்சலம், அஜித்தின் ராசி, விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரம்பா.
தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழி படங்களிலும் நடித்த ரம்பா, கடைசியாக பெண்சிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தொழிலதிபர்
பின்னர் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின் நடிப்பதை நிறுத்திவிட்ட அவர் கனடாவில் கணவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு லாவண்யா, சாஷா என்ற மகள்களும் ஷிவின் என்ற மகனும் உள்ளனர்.

திருமண நாள்
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 11 ஆம் தேதி, தனது திருமண நாளைச் சிறப்பாகக் கொண்டாடும் ரம்பா, கடந்த சில நாட்களுக்கு முன் திருமண நாளை கொண்டாடினார். கொரோனா காரணமாக, யாரையும் அழைக்காமல் வீட்டிலேயே இந்த திருமண நாளை கொண்டாடியதாகத் தெரிவித்திருந்தார் ரம்பா.
View this post on InstagramA post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_) on
எளிமையாக
இதுபற்றி அவரது இன்ஸ்டாகிராமில், ' உலகம் முழுவதும் தற்போதுள்ளச் சூழல் காரணமாக எங்களைச் சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர்கள் இல்லாமல் என் கணவர், குழந்தைகளுடன் திருமண நாளைக் கொண்டாடினோம்' என்று கூறியிருந்தார். எளிமையாகக் கொண்டாடிய அந்த திருமண நாள் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். அதற்கு நடிகை மீனா உட்பட பலர் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

குழந்தைகள்
இந்நிலையில் நடிகை ரம்பா, தனது செல்ல குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்தப் போட்டோஸ், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள், சூப்பர் பேமிலி என்று கமென்ட் அடித்து வருகின்றனர். நீங்க இன்னும் அப்படியே இருக்கீங்க என்றும் உங்க குழந்தைங்க சூப்பராக இருக்கு என்றும் சிலர் கூறியுள்ளனர்.

அழகிய லைலா
சிலர், நம்ம ரம்பா சார் என்று கூறியுள்ளனர். ஒரு ரசிகர், தமிழ் சினிமா ரசிகர்கள் உங்களை மறக்கவே மாட்டார்கள். நீங்கள் எப்போதும் எங்களுக்கு அழகிய லைலாதான் என்று கூறியுள்ளனர். இந்த புகைப்படங்களைப் பார்த்தால் மூன்று பெண் குழந்தையும் ஒரு பையனும் என்பது போல இருக்கிறது என்று ஒரு ரசிகர், ரம்பாவையும் குழந்தையாக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











