அச்சு அசல் ரம்பா தான்.. அம்மாவை விட ஹைட்டா வளர்ந்த மகள்.. குடும்பத்துடன் நடத்திய பூஜை பிக்ஸ்!
சென்னை: நடிகை ரம்பா திருமணமாகி வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டில் ஆகி விட்ட நிலையில், சமீபத்தில் வீட்டில் நடத்திய பூஜை புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மீனாவின் கணவர் உயிரிழந்த சமயத்தில் சென்னை வந்த ரம்பா சில மாதங்கள் சென்னையில் வசித்து வந்தார். சமீபத்தில் அவர் அளித்த சில பேட்டிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியதும் குறிப்பிடத்தக்கது.
விஜயவாடாவில் பிறந்து வளர்ந்த ரம்பா பல்வேறு இந்திய மொழிகளில் நடித்து அசத்தினார். இந்திரகுமார் பத்மநாபன் எனும் தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்ட ரம்பா கனடாவில் வாழ்ந்து வருகிறார்.

ரம்பா வீட்டில் பூஜை: கனடாவில் வசித்து வந்தாலும் இந்திய பாரம்பரியத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார் நடிகை ரம்பா. தனது வீட்டில் சமீபத்தில் நடத்திய பூஜை புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சினிமா பிரபலங்களையும் தனது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். 47 வயதாகும் நடிகை ரம்பாவின் குழந்தைகள் எல்லாம் தற்போது நல்லாவே வளர்ந்து விட்டனர்.

அச்சு அசல் அம்மா போலவே: நடிகை ரம்பாவுக்கு சாஷா பத்மநாபன், லாவண்யா பத்மநாபன் என இரு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மாவை போலவே ரம்பாவின் மூத்த மகள் அச்சு அசல் அப்படியே இருக்கிறாரே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ரம்பாவை விட ஹைட்டா வளர்ந்துட்டார்: அம்மா ரம்பாவை விட மூத்த மகள் நல்லா ஹைட்டாகவே வளர்ந்து விட்டார். சமீபத்தில், நடிகை ரம்பா சென்னைக்கு வந்த நிலையில், தன்னை போலவே தனது மகளையும் ஹீரோயின் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டாரா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

ரஜினி பற்றி பேச்சு: நடிகை ரம்பா சென்னைக்கு வந்த போது அளித்த பேட்டியில் அருணாச்சலம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன்னை வைத்து பண்ண பிராங்க் பற்றியெல்லாம் வெளிப்படையாக பேசியிருந்தார். சல்மான் கானை பார்த்ததும் கட்டிப் பிடித்த என்னை ரஜினிகாந்த் வெறுப்பேற்றி அழ வைத்து விட்டார் என்றும் ஒரு காட்சியில் திடீரென லைட் ஆஃப் செய்யப்பட்ட நிலையில், யாரோ என் முதுகில் தட்டிச் சென்றது போல இருந்தது. அதன் பின்னர் தான் அது ரஜினி சார் பார்த்த வேலை என புரிந்துக் கொண்டேன். முதலில் ரொம்பவே பயந்து போய் கத்திட்டேன் என ரம்பா பேசியது சர்ச்சையாகவும் சோஷியல் மீடியாவில் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
புது வீடு கட்டிட்டாரா?: நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் பூஜை நடத்திய புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் நடிகை ரம்பாவின் புது வீடு புகுமனை விழாவா இது என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். கனடா நாட்டில் ரம்பாவின் வீடு எப்படி இருக்கு பாருங்க என்றும், சரியான நேரத்தில் சினிமாவில் இருந்து விலகி வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டார் ரம்பா என்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரம்பாவை போல அவரது மகளும் சினிமாவில் நடிக்க வருவாரா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன. ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்களும் ரம்பாவின் லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு லைக்குகளை போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











