90ஸ் கனவு கன்னி ரம்பா பிறந்தநாள்.. அம்மணியின் சொத்து மதிப்பு தெரியுமா?.. ஆத்தாடி இத்தனை ஆயிரம் கோடியா?

சென்னை: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 90களின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை ரம்பா. பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து செம பிஸியாக இருந்த அவர்; கடந்த 2010ஆம் ஆண்டு இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். குழந்தைகள் மற்றும் கணவரோடு நிம்மதியாக இருக்கும் அவர்; இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்நிலையில் அவரது மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆந்திராவை சேர்ந்த ரம்பா தனது திரை பயணத்தை தெலுங்கில் ஆரம்பித்தார். அங்கு அறிமுகமான முதல் படமே சூப்பர் வெற்றியை பெற்றதை அடுத்து; அங்கே தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. ஒரே வருடத்தில் தமிழில் தடம் பதிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. அதன்படி இங்கே உழவன் படத்தில் அறிமுகமானார். இங்கேயும் அவருக்கு காற்று சாதகமாக வீசியதால் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல ஹீரோக்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்தார்.

Rambha Turns 50 A Look at the Actress Reported Net Worth and Luxurious Life
Photo Credit:

தமிழ் ரசிகர்களின் கனவு கன்னி: ஒருகட்டத்தில் தெலுங்கைவிடவும் தமிழில் படுபிஸியாகிவிட்டார் அவர். மேலும் அவரை கோலிவுட் ரசிகர்கள் தங்களது கனவு கன்னியாகவே கொண்டாடினார்கள். முக்கியமாக ரம்பாவின் தொடைக்கென்றே அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. டிராகன் படத்தின் போது கயாடு லோஹரை எப்படி ரசித்தார்களோ அதைவிட அதிகமாக ரம்பாவை ரசித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
விஜய்யை நான் பார்க்கவே மாட்டேன்.. தங்கச்சி மாதிரி இருக்கவங்க ஓபன் டாக்
விஜய்யை நான் பார்க்கவே மாட்டேன்.. தங்கச்சி மாதிரி இருக்கவங்க ஓபன் டாக்

ஹிந்தியிலும்: இதற்கிடையே தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க; அங்கேயும் ஒரு கலக்கு கலக்கினார். மேலும் கன்னடம், மலையாளம் பெங்காலி, போஜ்புரி, ஆங்கிலம் என அவர் நடிக்காத மொழிகள் இல்லை. அவை அனைத்திலுமே அவர் பெரிய வெற்றியை பெற்றார் என்பதையும் கவனிக்க வேண்டும். ஒருகட்டத்தில் வாய்புகள் குறைய ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட ஆரம்பித்தார்.

திருமணம் செய்துகொண்ட ரம்பா: அதுவும் நீண்ட நாட்களுக்கு வரவில்லை. அதனையடுத்து இந்திரகுமார் என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் ரம்பா. அந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டில் ஆகியிருந்த அவர்; இப்போது மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார். சின்னத்திரையிலும் ரம்பாவை அடிக்கடி பார்க்க முடிகிறது.

ரம்பா பிறந்தநாள்: சூழல் இப்படி இருக்க இன்று அவர் தன் 50வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் அவரது மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வட்டமடிக்க தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில் அவருக்கு மொத்தம் 2,000 கோடி ரூபாய் சொத்து இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

கணவர் பெரிய தொழிலதிபர்: ரம்பாவின் கணவர் இந்திரகுமார் கனடாவில் பெரிய தொழிலதிபர் ஆவார். பல கம்பெனிகளை நடத்தி வரும் அவருக்கு; ஹோம் இன்டீரியர்தான் பிரதான தொழில்.மேலும் ரம்பாவின் பெயரில் மட்டுமே மொத்தம் ஐந்து கம்பெனிகளை அவர் நடத்திவருகிறாராம். மேலும் இலங்கையில் ஒரு ஐடி நிறுவனமும் ரம்பாவின் பெயரில் இருக்கிறதாம். ஆகமொத்தம் மகாராணி மாதிரி வாழ்ந்துவருகிறார் ரம்பா.

Read more about: rambha ரம்பா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X