தனிமூனாக ஹனிமூன் சென்ற காஜல்... 'நாசமா போச்சு'... இது நடந்தது பாரிஸில்!

நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாரிஸ்பாரிஸ் படத்தின் பிஹைன்ட் தி சீன்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

தனிமூனாக ஹனிமூன் சென்ற காஜல்-வீடியோ

சென்னை: நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாரிஸ்பாரிஸ் படத்தின் பிஹைன்ட் தி சீன்ஸ் வீடியோவை இயக்குனர் ரமேஷ் அர்விந்த் வெளியிட்டுள்ளார்.

விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால் என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் காஜல் அகர்வால். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் தற்போது பாரிஸ்பாரிஸ் எனும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். நடிகர் ரமேஷ் அர்விந்த் இந்த படத்தை இயக்குகிறார்.

பிறந்தநாள் பரிசு:

பிறந்தநாள் பரிசு:

இந்நிலையில் காஜல் அகர்வால் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, பாரிஸ் நகரில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளை, இரண்டரை நிமிட வீடியோ பதிவாக தொகுத்து, இயக்குனர் ரமேஷ் அர்விந்த் வெளியிட்டுள்ளார். இது காஜலுக்கு தனது பிறந்தநாள் பரிசு என்று அவர் கூறியுள்ளார்.

அரட்டை:

அரட்டை:

அந்த வீடியோ காட்சியில், தான் தனிமூனாக ஹனிமூன் சென்றுள்ளேன் என காஜல் கூறுகிறார். அதேபோல, ஒரு காட்சியில் பல்லியைப் பார்த்து அலறும் காஜல், மற்றொரு காட்சியில் செல்போனை பார்த்து, நாசமா போச்சு என்கிறார். ஒரு இடத்தில் நடிகை தமன்னாவுடன் அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறார் அவர்.

செல்பி புள்ள:

செல்பி புள்ள:

படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி படக்குழுவுடன் செல்பி எடுத்துக்கொள்ளும் காஜல், ஏராளமான அன்பை அனுப்புகிறேன் எனக் கூறி ரசிகர்களுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுக்கிறார். அத்துடன் அந்த வீடியோ முடிகிறது.

டிரெண்டிங்:

இன்று வெளியாகியுள்ள பாரிஸ்பாரிஸ் படத்தின் பிஹைண்ட் தி சீன்ஸ் காட்சிகள் யூடியூபில் டிரெண்டிங்காகி வருகிறது. நாமும் காஜலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம். ஹேப்பி பர்த்டே காஜல்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X