»   »  பில்கேட்ஸ் படத்தில் குத்து ரம்யா

பில்கேட்ஸ் படத்தில் குத்து ரம்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் நடத்தி வரும் பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில்தயாரிக்கப்படவுள்ள எய்ட்ஸ் விழிப்புணர்வு குறும் படத்தில் நடிக்க கன்னட நடிகை குத்து ரம்யா தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான பில் கேட்ஸ், தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார்.இந்த அறக்கட்டளை, எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உலகம் முழுவதும் பல்வேறுதிட்டங்களை அமல்படுத்தி வருகிறது, மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறது.

தற்போது இந்தியாவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது பில்கேட்ஸ்அறக்கட்டளை. குறிப்பாக கர்நாடகத்தில் இதுதொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்துக்காக குறும்படம் ஒன்றைத்தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்தப் படத்தை பிரபல கேமராமேன் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளார். கதையை இயக்குனர் மீரா நாயர்எழுதியுள்ளார். இதில் நடிகை ரம்யா நடிக்கிறார்.

கன்னடத்தைச் சேர்ந்த ரம்யா தமிழில் குத்து, கிரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கன்னடத்தில்பிரபலமாக, பிசியாக நடித்து வருகிறார். அவரது பிரபலத்தை அறிந்தே இக்குறும்படத்தில் நடிக்க வைக்க முடிவுசெய்துள்ளனர்.

மேலும் இப்படத்தை அப்படியே தமிழிலும் டப் செய்து வெளியிட முடியும் என்பதும் ரம்யாவைத் தேர்ந்தெடுக்ககூடுதல் காரணமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil