»   »  அழகு தங்கச்சி ரம்யா!

அழகு தங்கச்சி ரம்யா!

Subscribe to Oneindia Tamil

ஹீரோயினாக நடித்தால்தான் சிறப்பா? தங்கச்சி வேடத்திலும் கலக்க முடியும் என்று நிரூபிப்பது போல எம் மகன் படத்தில் பரத்தின் தங்கச்சியாகநடித்த ரம்யா கை நிறையப் படங்களுடன் பல படங்களில் தங்கச்சி வேடத்தில் கலக்கி வருகிறார்.

பார்க்க படு பளிச்சென ஒரு குட்டி ஹீரோயின் கணக்காவே இருக்கிறார் ரம்யா. பரத் படத்தில் இவரைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.அட, இவ்ளோ அழகா இருக்காரே, ஹீரோயினாக ஒரு நாள் கலக்குவார் என நினைத்திருக்கலாம்.

ஆனால் ரம்யாவோ அப்படியெல்லாம் பெரிய கனவு காணவில்லையாம். இப்போதைக்கு கிடைக்கிற ரோல்களில் நடிப்பதுதான் அவரது லட்சியாம்.கிளாமர் கோதாவில் குதிக்க நான் ரெடி இல்லை சார் என்கிறார் காரணம் கேட்டால்.

எம் மகனில் பரத்தின் தங்கச்சியாக வந்து போன இவர் இப்போது வீராப்பு படத்தில் சுந்தர்.சி.யின் தங்கச்சியாக நடிக்கிறாராம். படத்தில் சுந்தருக்குஇன்னொரு தங்கச்சியும் இருக்கிறார். அவர் சந்தோஷி.

டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் சந்தோஷி. ஓரிரு படங்களில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் இவரது முகம், நாயகிக்குரியவாகில் இல்லாததால், பெ-ரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை.

மறுபடியும் டிவிக்குப் போய் விடலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தவருக்கு தங்கச்சி வேடத்தில் நடிக்க ரெடியா என்று கேட்டு அழைப்பு வர கால்காசாக இருந்தாலும் கவர்ன்மெண்ட் காசாச்சே என்ற அடிப்படையில் சரி என்று மண்டையாட்டி விட்டு வீராப்பு படத்தில் சுந்தருக்கு தங்கச்சியாகிவிட்டார்.

விஜய்யின் அழகிய தமிழ் மகன் படத்திலும் சந்தோஷி நடிக்கிறார். இதில் ஹீரோயின் ஷ்ரியாவின் தோழியாக வருகிறாராம்.

Read more about: sweet sister ramya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil