»   »  இரவு ராணி ரம்யா!

இரவு ராணி ரம்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பில் கேட்ஸின் எய்ட்ஸ் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் எடுக்கப்பட்டு வரும் விழிப்புணர்வுதிரைப்படத்தில் குத்து ரம்யா, விபச்சாரப் பெண் வேடத்தில் படு கலக்கலாக நடித்துள்ளாராம்.

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான பில்கேட்ஸ் நிறுவியுள்ள எய்ட்ஸ் விழிப்புணர்வு அறக்கட்டளைஇந்தியாவின் பல்வேறு மொழிகளில் எய்ட்ஸ், எச்.ஐ.வி. விழிப்புணர்வு திரைப்படங்களைத் தயாரிக்கிறது.

இதில் கன்னடத்தில் சந்தோஷ் சிவன் இயக்கத்தில், பிரபு தேவா, குத்து ரம்யா ஆகியோர் நடிப்பில் குறும்படம்ஒன்று உருவாகியுள்ளது. இதில் லாரி டிரைவராக பிரபு தேவா நடிக்கிறார்.

குத்து ரம்யா, நெடுஞ்சாலைகளில் இரவு நேரத்தில் நின்று கொண்டு லாரி டிரைவர்களை மயக்கி விபச்சாரத்திற்குஅழைக்கும் இரவு ராணி வேடத்தில் நடித்துள்ளாராம்.

கூந்தலில் மல்லிகைப் பூவும், வாயில் வெற்றிலைச் சாறும், கண்களில் காமமும் வழிய வழிய டிரைவர்களைசந்தோஷத்திற்கு அழைக்கும் இரவு ராணியாக, படு கிளாமருடன் நடித்துள்ளாராம் ரம்யா.

இந்தப் படத்திற்கு பிராரம்பா என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் பழம்பெரும் நடிகை சரோஜா தேவியும்நடித்துள்ளாராம்.

இரவு நேர சாலையோர ராணிகளின் அழைப்புக்குப் பின்னால் எய்ட்ஸ் என்னும் கொடிய அரக்கன்ஒழிந்துள்ளதை உணர்த்தும் வகையில் இந்த கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளதாம்.

கிளாமர் பின்னணியல் காமத்தின் பேராபத்தை விளக்கும் வகையில் இந்தக் குறும்படத்தை சந்தோஷ் சிவன்படமாக்கியுள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil