»   »  திரும்பி வந்த ரம்யா!

திரும்பி வந்த ரம்யா!

Subscribe to Oneindia Tamil
தமிழ் படங்களில் திடிக்கவே மாட்டேன் என்று பெங்களூருக்கே திரும்பிப் போனகன்னடத்து பெங்குயின் குத்து ரம்யா மீண்டும் கோலிவுட்டை நாடி சென்னைக்குஓடோடி வந்துள்ளார்.

கன்னடத்தில் அறிமுகமாகி, தமிழுக்கு வந்து சேர்ந்தவர் ரம்யா. அவர் நடித்த முதல்படம் குத்து.

ஆனால் குத்து கை கொடுக்கவில்லை. தொடர்ந்து சொந்த ஊர்க்காரரான அர்ஜூடன்ஒரு படத்தில் நடித்தார். அதுவும் போணியாகவில்லை.

இந் நிலையில்தான் கன்னட திரையுலகில் பிற மொழிப் படங்களுக்குகட்டுப்பாடுகளைப் போட்டார்கள். மேலும் கன்னட நடிகர், நடிகையர் தமிழ் உள்ளிட்டபிற மொழிப் படங்களில் நடிக்கக் கூடாது என தடை உத்தரவு போட்டார்கள்.

இதைப் பார்த்து பயந்து போன சில நிடிகைகள் கன்னடத்தோடேயே முடங்கிவிட்டனர். அவர்களில் ரம்யாவும், ரக்ஷிதாவும் இருவர்.

இப்போது அந்தத் தடை உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டு விட்டது. இதனால் ரம்யாஉள்ளிட்ட சில நடிகைகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

கன்னடத்தில் இப்போது ரம்யாவுக்கு மார்க்கெட் திருப்திகரமாக இல்லை. இதனால்என்ன பண்ணுவது என்று யோசித்துப் பார்த்த ரம்யா, மீண்டும் தமிழிலேயே மோதிப்பார்ப்பது என்ற முடிவுக்கு வந்து சென்னைக்கு பேக்கப் ஆகியுள்ளார்.

பெங்களூரில் தமிழ் சினிமாக்காரர்களைப் பற்றி நக்கல் விட்டுக் கொண்டிருந்தவர்தான்ரம்யா. இனிமேல் அங்கே போய் நடிக்கவே மாட்டேன் என்று கரித்துக் கொட்டிக்கொண்டிருந்தார். ஆனால் வேறு வழியின்றி மீண்டும் தமிழையே அண்ட வேண்டியநிலை.

இப்போது புதுசாக ஒரு ஆல்பத்தை ரெடி செய்து கையோடு கொண்டு வந்துள்ளார்.சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள ரம்யா தீவிரமாகவாய்ப்பு தேட ஆரம்பித்துள்ளார்.

தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டும், நேரில் போயும் வாய்ப்பு கேட்டு வருகிறார்ரம்யா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil