»   »  குத்து ரம்யா தற்கொலைக்கு முயற்சி?

குத்து ரம்யா தற்கொலைக்கு முயற்சி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

குத்து பட நாயகி ரம்யா தற்கொலைக்கு முயன்றதாக பெங்களூரில் வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குத்த படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் ரம்யா. பெங்களூரைச் சேர்ந்த ரம்யா இப்போது தமிழைவிட கன்னடத்தில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஷாமுடன் காதலா என்ற படத்தில் நடித்து

வருகிறார்.இந்த நிலையில், ரம்யா குறித்த வதந்தி பெங்களூரில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லண்டனுக்குச்சென்றிருந்த ரம்யா அங்கு தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் பரவியதால் பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலைக்கு முயன்ற ரம்யாவை காப்பாற்றி அங்குள்ள மருத்துவ மனையில் அனுமதித்து காப்பாற்றிவிட்டார்கள்என்று கூறப்படுகிறது. ஆனால் இது வெறும் வதந்தி, ரம்யா தற்கொலைக்கு முயலவில்லை என்றுரம்யா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

ரம்யா குறித்த செய்தி வதந்தி என்ற போதிலும் கூட சமீபகாலமாக அவர் பல்வேறு குழப்பங்களில் இருந்துவருவதாக கன்னடத் திரையுலகினர் தெரிவித்துள்ளனர். இதில் ஏதாவது ஒரு பிரச்சினையில் அவர்மனம் உடைந்துஇந்த முடிவுக்கு வந்திருக்கலாம் எனகூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil