பொல்லாதவன் 2வுக்கு வெயிட்டிங்.. தனுஷ் பக்கத்துல நிற்கிறது யாருன்னு பாருங்க.. அதே ரம்யா தான்!

சென்னை: சிம்புவுடன் குத்து, தனுஷ் உடன் பொல்லாதவன், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா பொல்லாதவன் படத்தின் 15 வருட கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பாக மற்றுமொரு தரமான இயக்குநராக வெற்றிமாறன் அறிமுகமான படம் தான் பொல்லாதவன்.

ரஜினிகாந்த் டைட்டிலில் தனுஷ், ரம்யா, ஆடுகளம் கிஷோர், சந்தானம் மற்றும் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்த பொல்லாதவன் திரைப்படம் பைக் பிரியர்களின் ஆல்டைம் ஃபேவரைட் படமாக இன்றளவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்சர் பைக் வச்சு

பல்சர் பைக் வச்சு

மீசை முளைத்த உடனே பெண்கள் மீது காதல் வருகிறதோ இல்லையோ, பைக் மீது கண்டிப்பாக இளைஞர்களுக்கு காதல் வருவது நிச்சயம். ஒரே ஒரு பல்சர் பைக்கை வைத்துக் கொண்டு கதை சொல்ல முடியுமா என பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி பொல்லாதவன் என தரமான கேங்ஸ்டர் படத்தை யதார்த்தம் குறையாமல் இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க வைத்தார் வெற்றிமாறன்.

ரஜினி டைட்டிலில் தனுஷ்

ரஜினி டைட்டிலில் தனுஷ்

ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பல டைட்டில்களில் நடிகர் தனுஷ் நடித்து வந்தார். பொல்லாதவன் டைட்டிலில் தனுஷ் நடித்த படம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் கொடுத்தது. தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்து ஏகப்பட்ட விருதுகளையும் வெற்றிகளையும் அள்ளிக் குவித்தார்.

15 வருட கொண்டாட்டம்

15 வருட கொண்டாட்டம்

இந்நிலையில், பொல்லாதவன் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு பெற்ற கொண்டாட்டம் நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. வெற்றிமாறன், தனுஷ், ஜிவி பிரகாஷ் உடன் படத்தின் நாயகி ரம்யாவும் கலந்து கொண்டது தான் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியாக மாறியது.

பொல்லாதவன் 2

பொல்லாதவன் 2

நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் உடன் இணைந்து 15 ஆண்டுகளுக்கு முன்னதாக பொல்லாதவன் படத்தில் இணைந்து நடித்த அனுபவங்களை மீண்டும் அசைப்போட்டு பார்க்கும் விதமாக ரம்யா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரை பார்த்ததுமே ரசிகர்கள் செம உற்சாகமடைந்தனர். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும், பொல்லாதவன் 2 படத்துக்காக வெயிட்டிங் என்றும் அடுத்த படத்திற்கான அடி போட்டுள்ளார்.

தனுஷ் பரிந்துரை

தனுஷ் பரிந்துரை

பொல்லாதவன் படத்தில் தன்னை வெற்றிமாறனுக்கு அறிமுகம் செய்து வைத்து ஹீரோயினாக போடும் படி தனுஷ் தான் பரிந்துரை செய்தார் என்றும் குறிப்பிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கம், ஜிவி பிரகாஷின் பெஸ்ட் பிஜிஎம் என பொல்லாதவன் படம் வேறலெவலில் இருந்தது என பதிவிட்டுள்ளார் ரம்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X