அரசியல்வாதி நடிகை ரம்யா ஆன்மீகத்திற்கு மாறினார்!

By Mayura Akilan

பெங்களூரு: நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறி எம்.பியான நடிகை குத்து ரம்யா, லோக்சபா தேர்தலின் தோல்வியை அடுத்து ஆன்மீகத்தின் பக்கம் தன் கவனத்தை திருப்பியுள்ளாராம்.

யோகா, தியானம் என்று மனதை அமைதியடையச் செய்வதோடு,யாருடனும் பேசாமல் மவுனவிரதமும் கடைபிடிக்கிறாராம்.

குத்து ரம்யா

குத்து ரம்யா

தமிழில் ‘குத்து', ‘கிரி', தனுசுடன் ‘பொல்லாதவன்', சூர்யாவுடன் ‘வாரணம் ஆயிரம்', ஜீவாவுடன் ‘சிங்கம் புலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் குத்து ரம்யா. தனது பெயரை திவ்ய ஸ்பந்தனா என்று மாற்றிக் கொண்டதன் மூலம் கன்னடத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் நடிகை

காங்கிரஸ் கட்சியில் நடிகை

2011-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கர்நாடக இளைஞர் காங்கிரசில் முக்கிய பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

எம்.பியான ரம்யா

எம்.பியான ரம்யா

2013-ல் மாண்டியா தொகுதியில் நடைபெற்ற லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

தோற்றுப்போன ரம்யா

தோற்றுப்போன ரம்யா

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட அவருக்கு சீட் வழங்கப்பட்டது. ஆனால் அவர் தோல்வி அடைந்தார்.

கட்சியினர் உள்குத்து

கட்சியினர் உள்குத்து

சக காங்கிரஸ்காரர்களே தனக்கு எதிராக தேர்தல் வேலை செய்து தோற்கடித்து விட்டனர் என்று குற்றம் சாட்டினார். அவருக்கு மன உளைச்சளும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தியானம் பழகும் ரம்யா

தியானம் பழகும் ரம்யா

இந்த நிலையில்தான் தற்போது இவருக்கு ஆன்மீக சிந்தனைகள் ஏற்பட்டு உள்ளது. மும்பையில் உள்ள பிரபல விபாசனா தியான மையத்துக்கு சென்று பத்து நாட்கள் தங்கி பயிற்சி செய்துள்ளார். அங்கு தொடர்ச்சியாக தியானம் செய்த ரம்யா, யாரிடமும் பேசவில்லையாம், மவுன விரதமும் கடைபிடித்தார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X