»   »  ரம்யா 'கிருஷ்ணம்மன்'!

ரம்யா 'கிருஷ்ணம்மன்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil


ரம்யா கிருஷ்ணன் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா பக்கம் தலை காட்டுகிறார். இம்முறை காமாட்சி அம்மன் வேடத்தில் சாமி படத்தில் நடிக்கவிருக்கிறார்.


கவர்ச்சி தேவதையாய் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகைக் கலக்கியவர் ரம்யா கிருஷ்ணன் படையப்பாவுக்கு முன்பு பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் தமிழில் அவருக்கு படையப்பாவுக்குப் பின்னால்தான் பிரேக் கிடைத்தது.

அதன் பின்னர் கமல், விஜயகாந்த், சரத்குமார் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஒரு ரவுண்டு அடித்தார். வயதையும் தாண்டிய அவரது வனப்பும், நடிப்பு பிளஸ் ஆட்டத் திறமையும் இளம் ஹீரோயின்களுக்கு கடும் சவாலாக இருந்தன.

அதன் தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை மணந்து செட்டிலானார். ஒரு குழந்தையும் பிறந்தது. அதன் பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். மாறாக டிவியில் புகுந்தார். அவர் நடத்திய தங்க வேட்டை கேம் ஷோ, கலக்கலாக இருந்தது.

இந்த நிலையில் சின்ன இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ளார் ரம்யா.

கண்ணாத்தாள், ராஜராஜேஸ்வரி என சாமிப் படங்களை இயக்கிய பாரதிகண்ணன் இயக்கும் மாங்காடு காமாட்சி என்ற புதிய சாமிப்படத்தில் காமாட்சி அம்மன் வேடத்தில் நடிக்கிறாராம் ரம்யா கிருஷ்ணன். இது பக்திப் படமாக மட்டுமல்லாமல் சமூகக் கருத்துடன் கூடிய படமாகவும் இருக்குமாம்.

ரம்யா தவிர வலுக்கட்டாயமாக ரிடையர்ட் கொடுக்கப்பட்ட ராம்கி மற்றும் சுகன்யா, ரஞ்சித் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம்.

இந்தக் காலத்தில் எடுக்கப்படும் பக்திப் படம் என்பதால் கிராபிக்ஸ் விளையாட்டுக்கள் எக்குத்தப்பாக இருக்குமாம். ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் இருக்கும் என்கிறார் பாரதி கண்ணன்.

'ஆத்தா' படம், பாத்து எடுங்க!

Read more about: ramyarishnan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil