வீக் என்ட் பார்ட்டி?.. திரிஷா, ரம்யா கிருஷ்ணன்னு நட்சத்திர பட்டாளமே இருக்கே.. நேற்றிரவு பாரில் ஆட்டம்?

சென்னை: நடிகை திரிஷா கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவராக கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறார். எத்தனை நடிகைகள் வந்தாலும் அவரது இடத்தை நெருங்கக்கூட முடியவில்லை. இப்போதும் விஜய், அஜித், கமல் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துவரும் அவர் வீக் என்ட் ஆனால் பார்ட்டி செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

திரிஷாவுக்கு இடையில் மார்க்கெட் சரிந்துதான் இருந்தது. 96 திரைப்படத்தில் அவர் ஏற்ற ஜானு கதாபாத்திரம் மீண்டும் அவரது கிராஃபை உயரத்துக்கு எடுத்து சென்றது. அந்தப் படத்திலிருந்து வரிசையாக வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டார். அதிலும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரை ஏற்று அமர்க்களப்படுத்தியிருந்தார் திரிஷா.

முன்னணி ஹீரோக்களுடன்: நயன்தாராவும் திருமணத்துக்கு பிறகு பெரிய தாக்கத்தை எதுவும் ஏற்படுத்த முடியவில்லை. அவருக்கு வாய்ப்புகள் அமைந்தாலும் முன்னர் போல் ஹிட் கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. திரிஷாவுக்கு அப்படி இல்லை பொன்னியின் செல்வன் சுமார் ஹிட்டானாலும் குந்தவையாக அவரை பார்த்த பிறகு உயிர் உங்களுடையது தேவி என ரசிகர்கள் சரண்டர் ஆக தொடங்கிவிட்டார்கள்.

Ramya Krishnan and Trisha s party photos are trending
Photo Credit:

பல வருடங்கள் கழித்து விஜய்யுடன்: தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் திரிஷாவின் வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தவகையில் விஜய்யுடன் லியோ படத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்து நடித்தார். அதுமட்டுமின்றி கோட் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டார். தொடர்ந்து அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி, கமலுக்கு ஜோடியாக தக் லைஃப் என அவர் காட்டில் செம மழைதான்.

நோ திருமணம்: தொடர்ந்து படங்களில் கமிட்டாகிவரும் அவர் எப்போது திருமணம் செய்துகொள்வார் என்பதுதான் நீண்ட காலமாக ரசிகர்களுக்கு இருக்கும் கேள்வி. ஆனால் அவரோ சிங்கிளாக இருந்தாலும் ஜாலிக்கு குறைவில்லை என்பதற்கேற்ப வாழ்க்கையை படு ஜாலியாக நகர்த்திவருகிறார். அவரது மைண்ட் செட்டை பார்க்கையில் இப்போதைக்கு அவருக்கு திருமணம் நடக்காது என்றே தெரிகிறது. அதுகுரித்து அவருக்கு எதையும் சொல்லாமல்தான் இருக்கிறார்.

வீக் எண்ட் பார்ட்டி?: வீக் என்ட் ஆனால் திரிஷா செமயாக பார்ட்டி செய்வார் என்று திரைத்துறையில் பேச்சு உண்டு. இந்நிலையில் சனிக்கிழமையான நேற்று நடிகை ரம்யா கிருஷ்ணன், ஆடை வடிவமைப்பாளர் சிட்னி உள்ளிட்டோருடன் அவர் பாரில் இருக்கும் புகைப்படங்களை ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். திரிஷாவும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து சனிக்கிழமை என்று கேப்ஷன் போட்டிருக்கிறார். இதன் மூலம் நேற்றிரவு திரிஷா செம ஜாலி பார்ட்டி செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் இப்போது இன்ஸ்டாவில் அதிகம் ஷேர் ஆகிவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X