ரம்யா கிருஷ்ணனும் நம்ம மாதிரிதான் ப்ரோ.. ஃப்ளைட்ல போனாலும் அப்படித்தான்.. வைரல் வீடியோ
சென்னை: ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஒருகாலத்தில் கலக்கியவர். பாலுமகேந்திரா உள்ளிட்டோரின் இயக்கத்தில் ஹீரோயினாக நடித்தவர்; இப்போது கேரக்டர் ரோலில் பட்டையை கிளப்பிவருகிறார். அதிலும் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் ராஜமாதா என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கிறது.
நடிகை ரம்யா கிருஷ்ணன் 80கள், 90களின் முற்பகுதியில் ஹீரோயினாக சினிமாவில் வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்த அவர் கவர்ச்சி, ஹோம்லி ரோல் என எதுவாக இருந்தாலும் ஏற்று நடித்து அசத்தியவர். ஹீரோயினாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே இரண்டாவது ஹீரோயினாகவும் கதைக்கு தேவைப்பட்டால் நடிக்கவும் செய்தார்.அது அப்போது பலரையும் ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

திறமையான நடிகை: ஒருகட்டத்தில் தூக்கலான கவர்ச்சி வேடங்களையும் ஏற்றார். பொதுவாக அந்த மாதிரி ரோலை ஏற்றால்; வெறும் கவர்ச்சி நடிகையாக மட்டும் முத்திரை விழும். ஆனால் ரம்யா கிருஷ்ணனுக்கு அந்த முத்திரை விழவில்லை. ஒருபக்க இப்படி நடித்தாலும் மறுபக்கம்; ரஜினிக்கு படையப்பா படத்தில் வில்லியாக நடித்து அப்ளாஸை அள்ளினார். இன்றுவரை பல நடிகைகளுக்கு ரம்யா கிருஷ்ணன் ஏற்றிருந்த நீலாம்பரி கதாபாத்திரம் ட்ரீம் ரோலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ரோலில் அவ்வளவு கம்பீரமாக நடித்திருந்தார்.
மேகியாக ரம்யா: ரஜினியுடன் நடித்து ஸ்கோர் செய்ததுபோல் கமலுடன் பஞ்சதந்திரம் படத்தில் மேகி ரோல் ஏற்று அதிலும் அப்ளாஸை அள்ளினார். இப்படி எந்த ரோல் கொடுத்தாலும் அசாலட்டாக ஸ்கோர் செய்யும் அவரை இந்திய அளவில் ஃபேமஸ் ஆக்கியது என்றால் பாகுபலி படத்தில் அவர் ஏற்றிருந்த ராஜமாதா ரோல்தான். அந்த கேரக்டரில் கம்பீரமாக தோன்றி அனைவரையும் கவர்ந்தார். மேலும் அவரை ராஜமாதா என்றும் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.
ஜெயிலர் 2வில் ரம்யா கிருஷ்ணன்: வம்சி கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டு செட்டிலான அவர் இப்போதும் பிஸியாக நடித்துவருகிறார். அந்தவகையில் ஜெயிலர் 2 படத்தில் இப்போது கமிட்டாகியிருக்கிறார். கடைசியாக கட்டா குஸ்தி 2 திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார். அவர் தியேட்டரில் தோன்றிய சீனுக்கு ரசிகர்களிடையே வெகுவான அப்ளாஸ் எழுந்தது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக ஜெயிலர் 2 திரைப்படத்திலும் அவரது கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது. அதாவது அவரும், நடிகையும், கமலின் மகளுமான ஸ்ருதிஹாசனும் ஒரே விமானத்தில் பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்து சென்றார்கள். அப்போது விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவை ஸ்ருதி சாப்பிட்டார். ரம்யா கிருஷ்ணனோ நம்மை மாதிரி டிஃபன் பாக்ஸில் தனக்கு தேவையான உணவை வீட்டிலிருந்தே தயார் செய்து எடுத்து வந்து அதனை சாப்பிட்டார். அப்போது எடுக்கப்பட்டிருந்த வீடியோவில், 'ரம்யா கிருஷ்ணனை பார்த்தால் ஃபன்னாக இருக்கிறது' என ஸ்ருதி குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
