படையப்பா வெளியாகி 26 வருஷம் ஆச்சு.. ஜெயிலர் 2 முதல் நாள் ஷூட்.. ரம்யா கிருஷ்ணன் தரமான சம்பவம்!
சென்னை: படிக்காதவன் படத்தில் இருந்து ரஜினிகாந்த் உடன் நடித்து வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். படையப்பா படத்தில் அவர் நீலாம்பரியாக நடித்ததை எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்கவேமாட்டார்கள். அதற்குள் அந்த படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதுதொடர்பாகவும் அடுத்து தான் நடித்து வரும் ஜெயிலர் 2 குறித்த அப்டேட்டையும் அட்டகாசமாக ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், செளந்தர்யா, மணிவண்ணன், செந்தில், ராதா ரவி, ரமேஷ் கண்ணா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்த படையப்பா திரைப்படம் கடந்த 1999ம் ஆண்டு வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது.

படையப்பா படத்தின் கிளைமேக்ஸில் வருவது போல கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று அந்த படத்தைக் கொண்டாடினர். அதில் வில்லியாக நடித்து மிரட்டிய ரம்யா கிருஷ்ணனுக்கு பல ஆண்டுகள் கழித்து நெல்சன் ரஜினிகாந்தின் மனைவியாக நடிக்கும் வாய்ப்பை ஜெயிலர் படத்தில் வழங்கியிருந்தார்.
நீலாம்பரியை மறக்க முடியுமா?: படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து சூப்பர் ஸ்டாருக்கே செம டஃப் கொடுத்தவர் தான் ரம்யா கிருஷ்ணன். மின்சார கண்ணா பாட்டுக்கு ரம்யா கிருஷ்ணன் ஆடிய நடனத்தை எல்லாம் மற்ற நடிகைகள் ரீ - க்ரியேட் செய்ய முடியுமா என்பது சந்தேகம் தான். 18 வருஷம் ஒரே அறைக்குள் இருந்துவிட்டு அவர் வெளியே வரும் போது ஹாரர் படத்தை விட பயங்கரமான காட்சியாக இருந்தது. படையப்பா படத்துக்குப் பிறகு பாபா படத்திலும் நீலாம்பரியை மீண்டும் கொண்டு வந்து ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்திருப்பார்கள்.
26 வருடங்கள்: படையப்பா படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில், அதை குறிப்பிடும்படி ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களுக்கு ரெட்ரோ நினைவுகளையும் ஜெயிலர் 2 அப்டேட்டையும் அப்படியே அள்ளி கொடுத்திருக்கிறது. ரஜினிகாந்த் கூலி படத்தின் படப்பிடிப்பு இன்னமும் 20 நாள் தான் உள்ளது எனக் கூறியுள்ளார். அதே வேகத்தில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பையும் தொடங்குகிறார்.

ஜெயிலர் 2 முதல் நாள் ஷூட்டிங்: நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயிலர் முதல் பாகத்தில் முத்துவேல் பாண்டியனின் மனைவியாக நடித்திருந்தார். தனது மகனை கணவர் கொன்றுவிட்ட நிலையில், 2ம் பாதியில் அவரும் மருமகளாக நடித்த மிர்ணா இருவரும் என்ன ரியாக்ஷன் செய்யப் போகின்றனர் என்பதை பார்க்கவே ரசிகர்கள் ரொம்ப ஆவலாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











