அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் தபு நடித்த அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போறாங்க தெரியுமா?

சென்னை: அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான பாலிவுட் படம் அந்தாதூன். அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதன் உரிமையை வாங்கியுள்ள நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் மோகன் ராஜாவை வைத்து படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

அந்தாதூன்

அந்தாதூன்

2018ம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான அந்தாதூன் படம் இந்தியளவில் மிகப்பெரிய பாராட்டுக்களை குவித்தது. கண் தெரியாத பியானோ இசைக் கலைஞராக அந்த படத்தில் நடித்து அசத்தியிருந்தார் ஆயுஷ்மான் குரானா. தபு மற்றும் ராதிகா ஆப்தேவின் கதாபாத்திரங்களும் பேசப்பட்டன.

தேசிய விருது

தேசிய விருது

இந்த படத்திற்கு மாநில அளவிலான விருதுகள் மற்றும் மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகர் விருது ஆயுஷ்மான் குரானாவுக்கும் சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படத்திற்கான விருதினையும் அந்தாதூன் அள்ளியது. IMDB டாப் ரேட்டிங்கிலும் அந்தாதூன் படத்திற்கு அதிகளவில் மதிப்பெண்கள் கிடைத்தன.

பாக்ஸ் ஆஃபிஸ்

பாக்ஸ் ஆஃபிஸ்

வயாகாம் 18 மீடியா வெளியிட்ட அந்தாதூன் திரைப்படம் வெறும் 35 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டு, 456 கோடி வரை உலகளவில் வசூல் செய்து மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் சாதனையை நிகழ்த்தியது. பாலிவுட் ரசிகர்களின் ஃபேவரைட் படமான அந்தாதூன் படத்தை தமிழில் ரீமேக் செய்ய பிரசாந்த் முயற்சித்து வருகிறார்.

தமிழில்

தமிழில்

அந்தாதூன் படத்தை ரீமேக் செய்ய பல தயாரிப்பாளர்கள் போட்டிப் போட்டு வந்த நிலையில், அதன் உரிமையை தியாகராஜன் வாங்கியுள்ளார். தனது மகன் டாப் ஸ்டார் பிரசாந்தை வைத்து படத்தை எடுக்க முடிவு செய்த அவர், பிரபல இயக்குநர் மோகன் ராஜாவை இந்த படத்தை இயக்க அணுகியுள்ளார். மோகன் ராஜாவும் இந்த புரொஜக்ட்டுக்கு ஓகே சொல்லியுள்ளாராம்.

தபு கதாபாத்திரம்

தபு கதாபாத்திரம்

இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானாவுக்கு அடுத்தபடியாக பேசப்படுவது தபுவின் கதாபாத்திரம் தான். அந்த வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணனை அணுகியுள்ளதாகவும், அவரும் க்ரீன் சிக்னல் காட்டியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

பவர்ஃபுல்லான கதாபாத்திரங்களில் நடிப்பது என்பது ரம்யா கிருஷ்ணனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. பாகுபலியில் ராஜமாதாவாக கலக்கிய ரம்யா கிருஷ்ணன். சூப்பர் டீலக்ஸில் ஆபாச நடிகை ரோலில் நடித்து அசத்தினார். கெளதம் மேனனின் குயின் வெப்சீரிஸில் வேற லெவல் ஆக்டிங் கொடுத்து அசத்தியுள்ள ரம்யா கிருஷ்ணன், அந்தாதூனில் தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க கச்சிதமான தேர்வு.

கம்பேக்

கம்பேக்

பிரசாந்துக்கு இந்த படம் நிச்சயம் கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக அவர் நடித்த ஜானி படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்த பிரசாந்துக்கு அந்தாதூன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த தடவை பிரசாந்த் தனது பழைய ஃபார்முக்கு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X