குண்டு நடிகைகளுக்குத் தானே கோவில் கட்டுவீர்கள்...? - ரம்யா நம்பீசன் கேள்வி
சென்னை: குஷ்பூ, நமீதா, ஹன்சிகாவுக்கெல்லாம கோயில் கட்டியது இந்த தமிழ்நாட்டில்தானே. அதனால் நானும் குண்டு நடிகையாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என ரம்யா நம்பீசன் கூறியுள்ளார்.
ராமன்தேடிய சீதை என்ற படத்தில் தமிழுக்கு வந்த மலையாள நடிகை ரம்யா நம்பீசன். அதன்பிறகு ஆட்டநாயகன், குள்ளநரி கூட்டம், பீட்சா போன்ற படங்களில் நடித்தவர், இப்போது விமலுக்கு ஜோடியாக ரெண்டாவது படம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அப்போ அப்டி... இப்போ இப்டி...
தமிழில் பீட்சா படம்தான் ரம்யா நம்பீசன் நடித்த படங்களில் வெற்றி பெற்ற முதல் படம். அதனால் அதுவரைக்கும் இயக்குனர், தயாரிப்பாளர்களால் ஓரங்கட்டப்பட்ட அவரை இப்போதுதான் ராசியான நடிகை பட்டியலில் சேர்த்துள்ளனர்.

இரண்டாவது படம்... யா யா...
அதனால் அதையடுத்து உடனடியாக விமலுடன் இரண்டாவது படம் மற்றும் யா யா போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வரும், ரம்யா நம்பீசனிடம் மேலும் சில கம்பெனிகள் பேசி வருகின்றன.

நோ... டம்மி...
முன்பு மாதிரி டம்மியாக இல்லாமல், நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய வேடங்களாக தாருங்கள் என்று கேட்டுக்கொண்டு வரும் அவர், இனி இமேஜ் பார்க்கப்போவதில்லையாம். எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் துணிந்து நடிக்கப்போவதாகவும் கூறி வருகிறார்.

குண்டு தான் அழகு....
ரம்யாவிடம் சில இயககுனர்கள், உடம்பு பெருத்துப்போய் இருக்கிறதே. கொஞ்சம் எடையை குறைக்கலாமே என்று அறிவுறுத்தினார்களாம். அதற்கு, எடையை குறைப்பது பற்றி எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை உடம்பில் சதை போட்ட குண்டு நடிகைகளுக்குத்தான் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக கிடைக்கிறது. அந்த மாதிரி நடிகைகளைததான் ரசிக்கிறார்கள் என்கிறாராம் ரம்யா..

எனக்கும் கோயில் கட்ட ஆசை....
குஷ்பூ, நமீதா, ஹன்சிகா போன்ற நடிகைகளுக்கெல்லாம் கோயில் கட்டியது இந்த தமிழ்நாட்டில்தானே. அதனால் நானும் ரசிகர்களின் மனங்கவர்ந்த குண்டு நடிகையாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.

வாயடைக்க வைத்த ரம்யா...
என்னை உடம்பை குறைக்க வேண்டும் என்று மட்டும் கட்டாயப்படுத்தாதீர்கள் என்று ஆதாரங்களை புள்ளி விவரத்துடன் எடுத்து வைத்ததையடுத்து ரம்யா நம்பீசன் முன் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து நின்றார்களாம் அவருக்கு அட்வைஸ் செய்தவர்கள்.


Click it and Unblock the Notifications











