சூதானமா இருந்து பொழச்சிக்கடா ஆஜித்து.. பிக் பாஸ் ரகசியத்தை சொன்ன ரம்யா பாண்டியன்!
சென்னை : ரம்யா பாண்டியனும் ஆஜித்தும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதலே அக்கா தம்பியாகவே பழகி வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் ஆஜித்துக்கு வரிந்து கட்டிப் பேசிய ரம்யா பாண்டியன், பலருக்கும் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதற்காக சில இடங்களில் அவரை நாமினேட்டும் செய்கிறார்.
இந்நிலையில் இந்த வாரம் நடந்த பல்வேறு டாஸ்க்கில் வொர்ஸ்ட் பெர்ஃபாமர்ஸ் கேட்டகிரியில் பலரும் ஆஜித்தையும், ஆரியையும் நாமினேட் செய்ய இருவரும் ஜெயிலுக்கு சென்றுள்ளனர்.

எஸ்கேப் ஆகி விட்டார்
வாராவாரம் வொர்ஸ்ட் பெர்பாமர்ஷ் கேட்டகிரியில் சிக்கி வந்த ஷிவானி இந்த வாரம் யாரோட புண்ணியத்தாலோ அதிலிருந்து எஸ்கேப் ஆகி விட்டார். சொல்லப்போனால் ஷிவானியும் வொர்ஸ்ட் பெர்பாமர் தான் என்பது பலரது என்ன ஓட்டம்.

அடிக்கடி நாமினேஷனில்
பிக் பாஸ் தொடங்கியதிலிருந்தே ஷிவானியும் ஆஜித் மட்டும் மற்ற போட்டியாளர்களிடம் சகஜமாக பழகிக் கொள்ளாமல் தயங்கித் தயங்கி இருந்துவரும் நிலையில் இவ்விருவரும் அடிக்கடி நாமினேஷனில் சிக்கி வந்தனர்.

குறைவான பங்கு
இந்நிலையில் இந்த வாரத்திற்கான வொர்ஸ்ட் பெர்ஃபாமர்ஸ் யார்யார் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டுமென பிக்பாஸ் கூற அதற்கு அரசர்கள் அரக்கர்கள் டாஸ்க்கில் மற்றவர்களை விடக் குறைவான பங்கு எடுத்ததாக ஆஜித்தையும் ஆரியையும் நாமினேட் செய்தனர்.

பிக்பாஸ் ரகசியத்தை
இந்த நிலையில் ஆஜித் மற்றும் ஆரி கண்ணாடியால் அமைக்கப்பட்ட சிறைக்குள் தள்ளப்பட்டனர். ஆஜித் மீது ஆரம்பத்திலிருந்தே தனிப்பாசம் வைத்திருக்கும் ரம்யா பாண்டியன் அவருக்கு பிக்பாஸ் ரகசியத்தைப் பற்றி கூறியிருக்கிறார்.

இக்கட்டான சூழ்நிலைக்கு
சிறுவயது முதலே சிறந்த பாடகரான ஆஜித் அவ்வப்போது மட்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பாடல்களைப் பாடி அனைவரையும் குஷிப்படுத்தும் நிலையில், பெரும்பான்மையான சமயங்களில் அந்த திறமையை வெளிக்கொண்டு வராமல் இருப்பதால் தான் இதுப் போன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாகவும்.

ரகசியத்தை ஆஜித்திற்கு மட்டும்
எப்போதும் போல உன்னிடம் இருக்கும் மிகச் சிறந்த திறமையான பாடல் பாடி மகிழ்விப்பதை தொடர்ந்து செய்து கொண்டே இரு, அப்போதுதான் மக்களுக்கு நீ யார் என்று தெரியும். இவ்வாறு சிறைக்குச் செல்லும் முன் ஆஜித்திற்கு உள்ளே இருக்கும் சிங்கத்தை தட்டி எழுப்பி பிக் பாஸ் வீட்டுக்குள் இப்படி விளையாண்டால் தான் நீடிக்க முடியும் என்ற ரகசியத்தை ஆஜித்திற்கு மட்டும் போட்டுடைத்த ரம்யா பாண்டியன் இந்த வாரத்தில் பிக் பாஸ் போட்டியில் வெற்றியாளர் யாராக இருப்பார் என கணிக்கப்பட்டதில் முதலிடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications











