Don't Miss!
- Finance
நாளை பாரத் பந்த்.. என்னவெல்லாம் இயங்கும்.. எது இயங்காது.. எதற்காக இந்த பந்த்..!
- News
சட்டம் ஒழுங்கு மிக சிறப்பு...ஆபரேசன் கஞ்சா அரஸ்ட்...குற்றம் செய்தால் குண்டாஸ் பாயும் - சைலேந்திரபாபு
- Sports
ஐபிஎல் பிளே ஆஃப்- இன்றைய ஆட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய 5 வீரர்கள்.. முடிவையே மாற்றும் திறமையாளர்கள்
- Automobiles
சாலை ஓரத்துல மக்கி கொண்டிருந்த விண்டேஜ் கார்... தரமான மின்சார காராக மாற்றம்! முழு சார்ஜில் எத்தன கிமீ போகும்!
- Lifestyle
எச்சரிக்கை! உங்க முகத்தில் இந்த அறிகுறிகள் தெரிஞ்சா... உங்களுக்கு மாரடைப்பு வர போகுதுனு அர்த்தமாம்!
- Technology
கூகுள் எச்சரிக்கை: இந்த மூன்று செயலிகளை உடேன டெலிட் செய்யவும்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அம்மன் கெட்டப்பில் ரம்யா பாண்டியன்... இந்த போட்டோ ஷூட் புஸ்ஸா போச்சு!
சென்னை : நடிகை ரம்யா பாண்டியன் போட்டோஷூட்கள் மூலம் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம், அவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது.
தற்போது இவர், "நண்பகல் நேரத்து மயக்கம்" என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடந்து வருகிறது.
குவியும் குத்தாட்ட வாய்ப்புகள்.. இன்னும் பல கோடிகளை அதிரடியாக ஏற்ற நடிகை.. அப்படி ஆடவும் ரெடியாம்?

ரம்யா பாண்டியன்
இப்பொழுது வளர்ந்து வரும் நடிகைகள் முன்னணி நடிகைகள் உட்பட பலரும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி இணையதளத்தில் கலவரத்தை உண்டாக்கி வரும் நிலையில் அதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளியாக இருந்தது நடிகை ரம்யா பாண்டியன் தான். டம்மி டப்பாசு, ஆண்தேவதை, ஜோக்கர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மொட்டைமாடி போட்டோஷூட்
அந்த திரைப்படங்கள் பெரிதாக எடுபடாததால், இடுப்பு ஆயுதத்தை கையில் எடுத்து அதிரி புதிரி செய்தார் ரம்யா பாண்டியன். படங்களில் நடித்ததில் கிடைக்காத பெயரும் புகழும் ஒரே ஒரு மொட்டைமாடி போட்டோஷூட்டில் ஓவர் நைட்டில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறினார். இளைஞர்களின் பல்சை புரிந்து கொண்ட ரம்யாபாண்டியன் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.

கவர்ச்சி ததும்ப
சமூக வலைதளங்களில் ரம்யா பாண்டியனை பின்பற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மடங்காக அதிகரித்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கணிசமான திரைப்படங்களில் நடித்து வந்தாலும், கவர்ச்சி ததும்ப ததும்ப புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கறுப்பு புடவையில் இடையழகை தெரியவிட்டு ஹாட் போட்டோஷூட் நடத்தி இருந்தார். இந்த புகைப்படம் பல லைக்குகளை குவித்தது.

போட்டோஷூட் புஸ்
இந்நிலையில், ரம்யா பாண்டியன் அம்மன் கெட்டப்பில் படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். ரம்யாபாண்டியனின் எந்த புகைப்படத்திற்கும் கண்ணை மூடிக்கொண்டு லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தைப்பார்த்து எரிச்சலடைந்துள்ளனர். அம்மன் கெட்டப்பிற்கு கவர்ச்சி தேவையா என கேட்டு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ரம்யா பாண்டியனின் இந்த போட்டோ ஷூட் தற்போது புஸ்ஸா போச்சு என்றும் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.