செம மாடர்ன் லுக்கில் ரம்யா பாண்டியன்… குவியும் லைக்குகள் !

சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் கருப்பு வெள்ளையில் கலக்கலாக செஃல்பி எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், ஒரு மொட்டைமாடி போட்டோஷூட் நடத்தி இளசுகளில் மனதில் நீங்காமல் தங்கிவிட்டார்.

இவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் லைக்குகள் மலை போல் குவிந்து வருகின்றன.

முதல் திரைப்படம்

முதல் திரைப்படம்

நடிகை ரம்யா பாண்டியன் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி டப்பாசு படத்தின் மூலம் தான் அறிமுகமானார். 2016ம் ஆண்டு சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஜோக்கர் திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தவர்.

ஆண் தேவதை

ஆண் தேவதை

அதற்குப் பின்னர் சமுத்திரகனிக்கு ஜோடியாக ஆண்தேவதை என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை இதற்கிடையே இவர் நடத்திய போட்டோ ஷூட் மூலம் இளசுகள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

பிக்பாஸ்

பிக்பாஸ்

அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி பிக் வந்த ரம்யா பாண்டியனுக்கு நான்காம் இடம் தான் கிடைத்தது. சமீபத்தில் இவர் கதாநாயகியாக நடித்த ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

Recommended Video

Ramyakrishnan 51st Birthday Celebration | ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்
ஸ்டைலா செல்ஃபி

ஸ்டைலா செல்ஃபி

என்னத்தான் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தால், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது , கருப்பு வெள்ளையில் கலக்கலாக செஃல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் ஜீன்ஸ் மற்றும் ஷர்ட் அணிந்து மாடர்ன் லுக்கில் இருந்தார். இந்த புகைப்படத்தை வெளியான சிறிது நேரத்திலேயே ஏராளமான லைக்குகளை பெற்று வைரலானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X