Ramya Pandian: ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க.. என் திருமணத்தில் நடந்தது.. ரம்யா பாண்டியன் புலம்பல்
சென்னை: ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ரம்யா பாண்டியன் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்தாண்டு இவரது திருமணம் ரிஷிகேஷில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணம் குறித்து பலரும் பலவிதமாக பேசி வரும் நிலையில் ரம்யா பாண்டியன் மிகவும் மனம் வறுத்தப்பட்டு வெளியிட்டிருக்கும் வீடியோதான் அது. ஆனால், இதில் பலருக்கும் தெரியாத உண்மைகளையும் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். அதுகுறித்து இதில் காணலாம்.
தமிழ் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த 'டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். பிறகு ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் ஹீிரோயினாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து திரை பிரபலங்கள் வியந்தனர். இதைத்தொடர்ந்து தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து பிரபலம் அடைந்தார். இந்த நிக்ழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார் ரம்யா பாண்டியன். கொரோனா காலத்தில் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளே மக்கள் அனைவரும் முடங்கி கிடந்தனர். அந்த நேரத்தில் இவர் எடுத்து வெளியிட்ட மொட்டை மாடி போட்டோ ஷூட் புகைப்படம் சமூகவலைதளங்களில் காட்டுத் தீ போல் பரவியது. எந்த பக்கம் திரும்பினாலும் ரம்யா பாண்டியன் குறித்த செய்திகளாகவே நிறம்பி வழிந்தன. ஒரே நாளில் ஃபேமஸ் ஆனார். ஆனாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரவில்லை என்பது வருத்தமே.

காதல் திருமணம்: யோகா பயிற்சிக்கு சென்ற போது ரம்யா பாண்டியனுக்கு லவல் தவானுடன் நட்புறவு ஏற்பட்டு பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்தாண்டு ரிஷிகேஷில் திருமணம் நடைபெற்றது. சென்னையில் இவர்களது ரிஷப்னும் நடைபெற்றது. கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த சூழலில், லவல் தவானை திருமணம் செய்வதற்காக ரம்யா பாண்டியன் வரதட்சனை பெற்றதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவரது திருமணம் குறித்த செய்திகளும் சர்ச்சையாக மாறியது.

வரதட்சனை ஏன்?: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் லவல் தவான். அங்கு கடைப்பிடித்து வரும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்யும் ஆண் ஒருவர் பெண் வீட்டாருக்கு வரதட்சனை கொடுத்து தான் திருமணம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படியே லவல் தவான் வீட்டார் ரம்யா பாண்டியனுக்கு வரதட்சனை அளித்துள்ளனர். இதுகுறித்து ரம்யா பாண்டியன் அம்மாவும் சமீபத்தில் அளித்த பே்டடியிலும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரம்யா பாண்டியன் தனது யூடியூப் சேனல் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்திருக்கிறார்.
ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க: ஹாய் வணக்கம், எனக்கு திருமணம் குறித்து பலரும் பலவிதமா பேசிட்டு இருக்கீங்க. முதலில் ஒரு விசயத்தை சொல்லிக்கொள்கிறேன். நான் பள்ளியில் படிக்கும் போதே எனது செலவுகளை நானே பார்த்துக்கொண்டேன். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சென்று சம்பாதித்து வந்தேன். சினிமாவிற்கு வந்து நடுவில் தான் கொஞ்சம் நான் எதுவும் செய்யவில்லை. ஆனால் இப்போது வரை நான் எனது செலவையும், வீட்டையும் பார்த்துக்கொண்டு வருகிறேன். ஒரு வயது வந்த பிறகு நமக்கு தெரியும் எதை நாம் செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பது. இப்பவரைக்கும் அப்படித்தான் நடந்துகெ்ாள்கிறேன் என ரம்யா பாண்டியன் தெரிவித்தார்.

கஷ்டமாக இருக்கிறது: மேலும், என் திருமணத்தில் பாதி செலவுகளை நானே ஏற்றுக்கொண்டேன். இதில் வரதட்சணை என சொல்வது தான் ரொம்ப கஷ்டமாக உள்ளது. லவல் தவான் வீட்டு முறைப்படி அவர்களது வீட்டிற்கு பெண்களை அழைக்கும் போது அவர்களுக்கு நகை ஆடை கொடுத்து அழைப்பார்கள். அவர்களது பாரம்பரியமான முறையை மதித்து தான் வாங்கினேன். தயவு செய்து இதை வரதட்சணை என்று சொல்லாதீர்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது என ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











