Ramya pandian: தேம்பி அழுத ரம்யா பாண்டியன்.. தேற்றிய அருண்பாண்டியன்.. திருமணத்தில் என்ன நடந்தது!

சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் தனது நீண்ட நாள் காதலர் லவல் தவோனை நேற்று திருமணம் செய்துகொண்டார். இவரின் திருமணம் கங்கை நதிக்கரையில் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் திருமணத்திற்கு பின் முதல் முதலாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது

டம்மி பட்டாசு படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன், அந்த படத்தைத் தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை படத்தில் நடித்தார்.இந்த படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாகவும் இரண்டு குழந்தைகளின் தாயாகவும் நடித்திருந்தார். இந்த படம் சுமாராக ஓடியது. அதன் பிறகு ரம்யாவிற்கு எதிர்பார்த்த அளவிற்கு வராததால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி குயினாக மாறி போட்டோக்களை பதிவிட்டு வந்தார்.

ramya pandian lovel dhawan instagram

நடிகை ரம்யா பாண்டியன்: இதில் ரம்யா பாண்டியனின் மொட்டை மாடி போட்டோஷூட் மிகப்பெரிய அளவில் வைரலானது. அதன் தொடர்ந்துவிதவிதமான போட்டோக்களை பகிர்ந்து வந்தார்.இதன் பலனாக ரம்யாவிற்கு சினிமா வாய்ப்பு வரவில்லை என்றாலும், விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில், வீட்டில் சிறப்பாக விளையாடினாலும் இவரால் வெற்றி பெறமுடியாமல் போனது. இதையடுத்து சிம்பு தொகுத்து வழங்கிய ஓடிடி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

படவாய்ப்பு இல்லை: இதன் பிறகு சினிமா வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்தபடி சூர்யாவின் 2டி என்டர்டெமண்ட் தயாரித்தராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பேசப்பட்ட போதும் அடுத்தடுத்து படவாய்ப்பு வரவில்லை. இதைத்தொடர்ந்து,மலையாளத்திலும் என்ட்ரி கொடுத்த ரம்யா பாண்டியன், மாலை நேரத்து மயக்கம் படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் கேரள அரசின் மாநில விருதை பெற்றது.

கவர்ச்சி போட்டோஷூட்: தற்போது ரம்யா பாண்டியன் அருள் அஜித் உருவாகி வரும் இடும்பன்காரி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 4ஜி, டைட்டானிக், காதலும் கவுந்து போகும் ஆகிய படங்களை தயாரித்த சி.வி.குமார் தயாரித்து வருகிறார். இப்படத்தில்,ஷிவதா நாயர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜேர்னரில் உருவாகி உள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தவிர ரம்யாவிற்கு படங்கள் இல்லாததால் சோசியல் மீடியாவில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்தார்.

காதல் திருமணம்: இதையடுத்து, கடந்த வாரம் ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக செய்தி வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தீபாவளி அன்று தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தினார். இதையடுத்து, ரம்யா பாண்டியனுக்கும் அவரது காதலர் லவல் தவானுக்கும் நேற்கு ரிஷிகேஷ் கங்கை நதிக்கரையில் திருமணம் மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

தேம்பி தேம்பி அழுத ரம்யா பாண்டியன்: இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் திருமணத்திற்கு பின் முதல் முதலாக தனது கணவருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இருவரும் அழகாக கை கோர்த்துக்கொண்டு நடந்து வர, கங்கை நதிக்கரையில் திருமணம் நடக்கிறது. கழுத்தில் தாலி ஏறியதும் ரம்யா உணர்ச்சி வசப்பட்டு தேம்பி தேம்பி அழ, ரம்யாவை பெரியப்பா அருண் பாண்டியன் தேற்றுகிறார். அதன் கணவர் லவல் தவானும் நான் இருக்கிறேன் என்று ரம்யாவின் கை பிடித்துக்கொள்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X