அந்த நிகழ்ச்சியால் நான் ரொம்பவே பாதிக்கப்பட்டுவிட்டேன்.. குமுறும் முன்னாள் போட்டியாளர்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியால் தான் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் போட்டியாளரான பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பலரும் அந்த நிகழ்ச்சி குறித்தே பேசி வருகின்றனர்.
சமூக வலைதளங்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தே ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

பிக்பாஸ் குறித்து மனம் திறந்த நடிகை
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியும் போட்டியாளரும், பிரபல நடிகையுமான ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்தில் ரம்யா பாண்டியன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பிக்பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி எது என கேள்வி கேட்கப்பட்டது.

பிக்பாஸால் ரொம்பவே பாதிக்கப்பட்டுவிட்டேன்
அதற்கு பதிலளித்துள்ள ரம்யா பாண்டியன், "பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஆனால், அந்த நிகழ்ச்சியால் நான் ரொம்ப பாதிக்கப்பட்டேன். அந்த நிகழ்ச்சியால் பெயரே டேமெஜ் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்.

எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி
மேலும் அதைவிட குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெஸ்ட். என்றும் தனக்கு அந்த நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். காமெடியுடன் ஜாலியாக போகும், ரசிகர்களிடம் இருந்து எந்தவித வெறுப்பும் வராது என்றும் கூறியுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.

தவறாக பேசிய ரம்யா பாண்டியன்
நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது சக போட்டியாளரான ஆரியிடம் எப்போதும் வெறுப்பை காட்டிக் கொண்டிருந்தார். மேலும் சக போட்டியாளர்களிடமும் ஆரி குறித்து தவறாகவே பேசினார். இதனால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சனத்துக்கு ஆளானார்.

படங்களில் பிஸியான ரம்யா பாண்டியன்
நடிகை ரம்யா பாண்டியன், ஆண் தேவதை, ஜோக்கர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் இல்லாததால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திரும்பிய ரம்யா பாண்டியனுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது. சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











