ரஜினிகாந்த்துக்கு வயதானாலும் மாஸ் குறையல.. அவரை பார்க்க நடிகை செய்த செயல் என்ன தெரியுமா?
சென்னை: கூலி திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் ஜெயிலர் 2. அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த வருடத்தில் படம் ரிலீஸாகவிருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பை படம் சந்தித்திருக்கிறது. இதற்கு பிறகு கமல் தயாரிப்பில் ஒரு படத்திலும், கமலுடன் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
ரஜினி நடித்த கூலி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்தார் ரஜினி. இப்படத்தில் ரஜினிகாந்த்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இல்லாமல் விஜய் சேதுபதி முக்கிய ரோலை ஏற்றிருக்கிறாராம். அவருக்கு கெஸ்ட் ரோல்தான் என்றாலும் அது கதையில் திருப்புமுனை ஏற்படுத்தும்படி அமைந்திருக்கும் என்கிறார்கள். மேலும் பவன் கல்யாண் முக்கியமான வேடத்தை ஏற்றிருக்கிறார் என்று தெரிகிறது. படத்தின் ஷூட்டிங்கும் இந்தியாவின் பல பகுதிகளில் விறுவிறுவென்று நடந்தது.

படம் ஹிட்டாகுமா?: ரஜினிக்கு இந்தப் படத்தின் வெற்றி ரொம்பவே முக்கியமாகும். கடைசியாக அவர் நடித்த கூலி, வேட்டையன் இரண்டு படங்களுமே மெகா ஹிட்டெல்லாம் இல்லை. அதிலும் கூலிக்கு ஏற்பட்ட நிலைமை அவரது கரியரில் மிகப்பெரிய ட்ரோல் மெட்டீரியலாகிவிட்டது. லோகேஷ் கனகராஜுக்கும் அந்தப் படத்தின் தோல்வி மார்க்கெட்டி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல் இதற்கு முன்னர் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தில் மெகா ஹிட்டை பெற்றார். எனவே அதனை தக்க வைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறாராம்.
ஜெயிலர் 2 படத்தின் கதைக்கும், திரைக்கதைக்கும் நெல்சன் நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டார். அதேபோல் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் ஒவ்வொரு சீனையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். அனிருத்தும் தன் பங்குக்கு சிறந்த இசையை கொடுப்பார் என்பதால் இந்த நம்பிக்கை இருக்கிறது. கூலி படத்தில் சந்தித்த தோல்விக்கு இந்தப் படத்தில் தரமான பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறார் ரஜினிகாந்த். நிச்சயம் இப்படம் ஆயிரம் கோடி ரூபாயை அள்ளும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்
அடுத்த படங்கள்: ஜெயிலர் 2வை முடித்துவிட்டு கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதனை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். அவர் வெளியேறியதைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி உள்ளே வந்தார். இப்போதுவரை அவர்தான் இயக்குநர். சிபியுடனான படத்தையும் முடித்துவிட்டு நெல்சன் இயக்கத்திலேயே கமல்ஹாசனுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார். அதனை ரெட் ஜெயன்ட் முவீஸ் நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
ரம்யா பாண்டியன் வீடியோ: அதாவது தமிழில் சில படங்களில் நடித்தும்; பல ஃபோடோ ஷூட்டுகளை நடத்தியும் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அவர் திருமணம் செய்துகொண்டு பஞ்சாப்பில் செட்டில் ஆகிவிட்டார். சூழல் இப்படி இருக்க ரஜினியை சந்திக்க வாய்ப்பு அமைந்ததை அடுத்து; தனது வேலைகளை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அவசர அவசரமாக வந்த வீடியோவைத்தான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும் அந்த வீடியோவில், "ரஜினியை சந்திப்பதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. அந்த ஃபோன் வந்த 30 நிமிடங்களில் பஞ்சாப்பிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருக்கிறேன்" என தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோவில் ரஜினியை சந்தித்த காட்சிகளும் அடங்கியிருக்கின்றன. மேலும் அவருக்கு புத்தகம் ஒன்றையும் ரம்யா அன்பளிப்பாக கொடுத்தார். சாருகசி என்ற ஆடியோ நாடகத்துக்காக இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
