இறுக்கமான டி-ஷர்ட்டில்.. கும் போஸ் கொடுத்த நடிகை ரம்யா பாண்டியன்!
சென்னை : ரசிகர்களிடையே இப்பொழுது பிரபலமாக உள்ள நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவிற்கு டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகம் செய்யப்பட்டவர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு உலகமெங்கும் பல கோடி ரசிகர்களை கொண்டுள்ள இவர் இப்பொழுது படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
சூர்யாவின் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ரம்யா பாண்டியன் இப்பொழுது இறுக்கமான டி ஷர்ட்டில் கும்தாவாக போஸ் கொடுத்துள்ள கிளுகிளுப்பான புகைப்படங்கள் ரசிகர்களை குளிர்ச்சி படுத்தியுள்ளது.

விஜய் டிவியில்
பிரபலமான நடிகைகளுக்கு இணையாக நடிகை ரம்யா பாண்டியனுக்கும் தமிழில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்க ஒரே இரவில் மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் பிரபலமடைந்தவர் களில் மிக முக்கியமானவர். ரசிகர்களின் கனவுக்கன்னியாக உள்ள ரம்யா பாண்டியன் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு மக்களிடையே மிகவும் நெருக்கமானார்.

சிறந்த நடிகை
டம்மி டப்பாசு மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ரம்யா பாண்டியன் அதன்பிறகு சமுத்திரக்கனியுடன் இணைந்து ஆண்தேவதை மற்றும் ராஜுமுருகன் இயக்கி ஜோக்கர் ஆகிய படங்களில் நடித்து சிறந்த நடிகை என நிரூபித்தார்.
Recommended Video

ஆதரவாளர்கள்
ஏற்கனவே ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ரம்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதை அறிந்த ரசிகர்கள் குஷியில் இருக்க ஆரம்பத்தில் மிகச்சரியாக விளையாடியவர் போகப்போக விளையாட்டு நுணுக்கங்களை தெரியாமல் மக்களிடையே நெகட்டிவ் இமேஜைப் பெற்று இறுதி சுற்று வரை சென்று வெளியேறினார். இருப்பினும் எந்த அளவிற்கு ஆதரவாளர்கள் இருந்தார்களோ அதே அளவிற்கு எதிர்ப்பாளர்களும் இருந்தனர் என்பதே உண்மை.

கும்தாவாக வெட்கப்பட்டு
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பட வாய்ப்புகள் குவியும் என நினைத்துக் கொண்டிருந்தவருக்கு இதுவரை வாய்ப்பும் சரியாக அமையவில்லை. நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் மட்டும் ஒரே ஒரு திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு மட்டும் வெளியாகி இருந்தது. எனவே பழையபடி போட்டோ ஷூட்களில் இறங்கிய ரம்யா பாண்டியன் இப்பொழுது இறுக்கமான பச்சை டி ஷர்ட்டில் பார்க்கவே கும்தாவாக ஒரு சைடில் வெட்கப்பட்டுக்கொண்டே இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் கலக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











