நம்ம ‘புள்ளிங்கோ' எல்லாம் பயங்கரம்.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட அடுத்த அதிரடி போட்டோ.. ரசிகர்கள் ஷாக்
புள்ளிங்கோ ஹேர்ஸ்டைலில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.
Recommended Video
சென்னை: கவர்ச்சியான சேலை புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கிறங்கடித்த நடிகை ரம்யா பாண்டியன், இப்போது புள்ளிங்கோ ஹேர் ஸ்டைலில் புதிய போட்டோ ஒன்றை போட்டு அதிர வைத்துள்ளார்.
ஜோக்கர், ஆண் தேவதை உள்பட சில தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சமீபத்தில் சேலை கட்டி எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டார். படங்களில் நடித்தபோது கூட கிடைக்காத புகழை, இப்புகைப்படங்கள் அவருக்கு பெற்றுத் தந்தது. பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
இதனால் அவரது ரசிகர் வட்டம் அதிகரித்தது, இணையத்திலும் சென்சேஷனல் நடிகை ஆனார். எனவே தொடர்ந்து அவரும் தனது சமூகவலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்யத் தொடங்கினார்.

புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல்
அப்படியாக தற்போது, ‘புள்ளிங்கோ' ஹேர்ஸ்டைலுடன் உள்ள புதிய புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். தனது நீளமான கூந்தலை வெட்டி விட்டு இப்படி புள்ளிங்கோ பசங்க மாதிரி ஹேர்ஸ்டைல் வைத்திருக்கிறாரே என அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அது நிஜமில்லையாம். வெறும் விக் தானாம்.
விக் தானாம்
இதனால் சமாதானம் ஆன ரம்யா ரசிகர்கள், ‘நல்லவேளை விக் தானா.. எனக்கு பக்குனு ஆகிடுச்சு' என கமெண்ட் வெளியிட்டுள்ளனர். ஆனால், இந்த கெட்டப்பிலும் ரம்யா அழகாக இருக்கிறார். இதனையும் அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
View this post on InstagramA post shared by Ramya Pandian (@actress_ramyapandian) on
சேலை புகைப்படங்கள்
சேலை மூலம் புகழ் பெற்றதாலோ என்னவோ அடிக்கடி தனது சேலை புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து வருகிறார் ரம்யா. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில், உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

படவாய்ப்புகள்
அவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படங்களுக்கும் லைக்ஸ் அதிகமாகக் கிடைக்கிறது. வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களையும், கமெண்ட்களையும் அள்ளி வருகிறது. ஆனால், ரம்யாவின் இந்த அசத்தல் புகைப்படங்களைப் பார்த்து, அதற்குப் பலனாக படவாய்ப்புகள் கிடைத்ததாகத் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











