ஹோலி கொண்டாட்டமே ரம்யா பாண்டியன் மேலத்தான்.. அதுவும் அந்த டாப் ஆங்கிள் போஸ் எல்லாம் வேற ரகம்!

சென்னை: பிக் பாஸ் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் ஹோலி கொண்டாடிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார். வடநாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை நம்மூரில் போட்டோஷூட் பண்டிகையாக இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் மாற்றியுள்ளனர்.

எந்தவொரு பண்டிகையாக இருந்தாலும் சில இன்ஸ்டாகிராம் அழகிகள் அட்டகாசமாக போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு விடுவார்கள். அந்த வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரம்யா பாண்டியன் ஹோலி கொண்டாட்டத்தை அழகான புகைப்படங்களால் ரசிகர்களிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளார்.

Ramya Pandian shares Holi celebration colorful photos

'ஜோக்கர்' ரம்யா பாண்டியன்: 'டம்மி டப்பாசு' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். நடிகர் அருண் பாண்டியனின் சகோதரரின் மகளான இவர் ரொம்பவே கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்தவர். ஆரம்பத்தில் ரோட்டில் நின்று பாம்ப்ளட்ஸ் எல்லாம் கொடுத்து கஷ்டப்பட்டுள்ளேன் என பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அவரே கூறியிருந்தார். ராஜு முருகன் இயக்கிய 'ஜோக்கர்' படத்தில் குரு சோமசுந்தரத்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்ததாக சமுத்திரகனியின் ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார்.

Ramya Pandian shares Holi celebration colorful photos

குக் வித் கோமாளி டு பிக் பாஸ்: பட வாய்ப்புகள் கிடைத்தாலும் பெரியளவில் தனக்கான பெயரோ புகழோ கிடைக்கவில்லை என நினைத்திருந்த ரம்யா பாண்டியன் இடுப்பு போட்டோஷூட் நடத்திய நிலையில், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, பிக் பாஸ் என ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோ வாய்ப்புகளை பெற்றார். பிக் பாஸ் சீசன் 4 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர்.

Ramya Pandian shares Holi celebration colorful photos

மம்மூட்டிக்கு ஜோடி: சூர்யா தயாரிப்பில் வெளியான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்த ரம்யா பாண்டியன் அடுத்ததாக மம்மூட்டி நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார். மேலும், சில படங்களிலும் ஓடிடி வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன்.

Ramya Pandian shares Holi celebration colorful photos

ஹோலி கொண்டாட்டம்: நாடு முழுவதும் பாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை பலரும் ஹோலி கொண்டாடி வருகின்றனர். அதன் வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் ஹோலி கொண்டாடிய போட்டோஷூட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

Ramya Pandian shares Holi celebration colorful photos

டாப் ஆங்கிள் தூக்குது: அழகான முகத்தில் மேலும், வண்ணம் அடித்து கலர்ஃபுல்லாக செம ஹேப்பியாக இருக்கும் புகைப்படங்களை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார். டாப் ஆங்கிள், சைடு போஸ் என வித விதமான போஸ்களை கொடுத்து ரசிகர்களின் ஹார்ட் பீட்டுகளை எகிற வைத்து வருகிறார் ரம்யா பாண்டியன்.

Ramya Pandian shares Holi celebration colorful photos

27 லட்சம் ரசிகர்கள்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். தற்போது 2.7 மில்லியன் ரசிகர்கள் ரம்யா பாண்டியனை ஃபோலோ செய்து வருகின்றனர். டாப்லெஸ் போட்டோஷூட், பாரில் இருந்தபடி போட்டோக்கள் என வித விதமான கவர்ச்சி போட்டோக்களை போட்டு ஃபாலோயர்களை அதிகரித்துக் கொண்டே செல்கிறார் ரம்யா பாண்டியன். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு விஜய் டிவி பிரபலங்களும் பிக் பாஸ் ரசிகர்களும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X