“என் வருங்கால கணவர்“… திருமணம் குறித்து மனம் திறந்த… ரம்யா பாண்டியன்!

சென்னை : செம க்யூட்டான கிளாமரான பொண்ணு என்று பெயர் எடுத்தவர் ரம்யா பாண்டியன்.

இவர் நடித்தது என்னமோ ஒரு சில படங்கள் தான் என்றாலும் முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டத்தை தன் பக்கம் வைத்துள்ளார்.

தனது திருமணம் குறித்து ரம்யா பாண்டியன் அளித்துள்ள பதில் இணையத்தில் டிராண்டாகி வருகிறது.

போட்டோஷூட் வைரலானது

போட்டோஷூட் வைரலானது

ஜோக்கர், ஆண் தேவதை படத்தில் நடித்திருந்தார் ரம்யாபாண்டியன் இந்த திரைப்படங்கள் விமர்சன ரீதியாக வெற்றிப்பெறவில்லை. இதையடுத்து, தனது திறமையை போட்டோசூட்டில் காட்டிய ரம்யா பாண்டியன், அடித்து தூள் கிளப்பினார். அந்த போட்டோஷூட் பெரிய அளவில் வைரலானதைத் தொடர்ந்து இளசுகள் மனதில் இடம்பிடித்தார்.

சூர்யாவின் படத்தில்

சூர்யாவின் படத்தில்

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளரானார். அந்த வீட்டில் இறுதிவரை இருந்த பின்னர் வெளியேறினார் . பிக் பாஸ் இல்லத்தில் பல நெகட்டிவ் கமெண்டுகளை பெற்றாலும், இவர் காட்டில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஒரே வாரத்தில் சூர்யாவின் படத்தில் கமிட் ஆனார். ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில் வெளியானது.

மனம் திறந்து பதில்

மனம் திறந்து பதில்

எப்படியாவது முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றுவிட தீயாக இறங்கி விதவிதமான போட்டோஷூட் நடத்தி வருகிறார். இணையத்தை திணறடித்து வரும் ரம்யா பாண்டியன், ரசிகர்களின் கேள்விக்கு மனம் திறந்து பதில் அளித்துள்ளார். அதில் ஒரு ரசிகர், ரம்யா பாண்டியன் நீங்க என்ன படிச்சி இருக்கீங்க, உங்கள மாதிரி ஒரு பெண்ணைத்தான் என் பையனுக்கு தேடிட்டு இருக்கேன் என்று கேட்டுள்ளார். இதற்கு சிரிக்கும் எம்மோஜியை பதிவிட்ட ரம்யா, இந்த விஷயம் உங்க பையனுக்கு தெரியுமா என கேட்டுள்ளார்.

Recommended Video

அக்கா Ramya Pandian ஐ நான் எப்பவும் அப்படி நினைத்ததில்லை | Keerthi pandian chat | Filmibeat Tamil
வாய்ப்பில்லை ராஜா

வாய்ப்பில்லை ராஜா

ரம்யா பாண்டியனின் மற்றொரு தீவிர ரசிகர், திருமணம் குறித்து கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ரம்யா பாண்டியன் எனக்கானவரை நான் கண்டுபிடிக்கும்போது, அவருக்கும் என்னை பிடிக்க வேண்டும். அதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை ராஜா என்பது போல கூலாக பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X