காதல் தோல்வியால் உடைஞ்சு போயிட்டேன்.. அவங்க தான் என்னை அதிலிருந்து மீட்டாங்க.. ரம்யா பாண்டியன் ஓபன்!
சென்னை: கீர்த்தி பாண்டியன் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்ததில் இருந்து நடிகை ரம்யா பாண்டியனுக்கு எப்போது திருமணம் ஆகும் என்கிற கேள்வி எழுந்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், தனது உடன்பிறந்த சகோதரி திரிபுர சுந்தரியுடன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியுள்ளார்.
நடிகை ரம்யா பாண்டியனுக்கு கமல்ஹாசன் சிரித்துக் கொண்டே ஊசி போடும் மருத்துவர் என்றே பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது பெயர் வைத்திருப்பார். விஷ பாட்டில் என்றெல்லாம் நெட்டிசன்கள் ட்ரோல் செய்துள்ளனர். பிக் பாஸ் ரசிகர்களின் தலைவியாகவும் மாறியவர் ரம்யா பாண்டியன்.

அவருக்கு இப்படியொரு லவ் பிரேக் சோகம் உள்ளதா? என ஆச்சர்யப்படுத்தும் வகையில் தனது மனதில் உள்ள வலிகளை சமீபத்திய பேட்டியில் வெடித்து ஓபன் பண்ணி பேசியிருக்கிறார்.
நடிகை ரம்யா பாண்டியன்: அருண் பாண்டியனின் சகோதரர் துரை பாண்டியனின் மகள் தான் ரம்யா பாண்டியன். 2015ம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 2016ம் ஆண்டு ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான ஜோக்கர் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அதன் பின்னர், ஆண் தேவதை படத்தில் நடித்த ரம்யா பாண்டியனுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் போட்டோஷூட்களை நடத்தி வந்தார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு கலக்கினார்.

திருமணம் ஆகவில்லை: 33 வயதாகும் நடிகை ரம்யா பாண்டியன் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. பிக் பாஸுக்கு பிறகு சூர்யா தயாரிப்பில் வெளியான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்தார். மம்மூட்டியுடன் மலையாளத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்த அவர் அடுத்ததாக இடும்பன்காரி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது தங்கைக்கு எப்படி பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்பது குறித்தெல்லாம் அவரது சகோதரி பேசியுள்ளார்.

பிளேபாய் வேண்டாம்: திருமண வாழ்க்கையை புரிந்துக் கொண்டு தங்கையை கவனமாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பான பையன் கிடைக்க வேண்டும். இந்த பிளேபாய் போன்ற பையன் எல்லாம் வேண்டாம் என அவரது அக்கா ஸ்ட்ரிக்ட்டாக கண்டிஷன் போட்டுள்ளார்.
பிரேக்கப்பால் உடைந்து போனேன்: நடிகை ரம்யா பாண்டியன் பேசும் போது, தனக்கு ரொம்பவே பேட் பிரேக்கப் நடந்தது. அதிலிருந்து எப்படி மீள்வதென்றே தெரியவில்லை. உடைந்து போய்விட்டேன். ஒல்லியாக எல்லாம் அதனால் ஆகிவிட்டேன். என் அக்கா தான் அம்மா மாதிரி இருந்து என்னை அதிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தார் என உருக்கமாக பேசியுள்ளார்.
கவர்ச்சி போட்டோவுக்கு கமெண்ட்: உள்ளாடை அணிந்தபடியெல்லாம் படுபோல்டாக சமீப காலமாக ரம்யா பாண்டியன் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமை சூடாக்கி வருகிறார். இந்நிலையில், அப்படியொரு போட்டோவை அவருடைய அக்காவிடம் காட்ட இதுக்கு என்ன கமெண்ட் சொல்றதுன்னே தெரியல என சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார். அக்கா மூலமாகத்தான் கோயில்களுக்கு எல்லாம் போக ஆரம்பித்தேன் என்றும் ஆன்மிகத்தின் மீது திடீரென தனக்கு ஆர்வம் வரவும் அவர் தான் காரணம் என்றும் ரம்யா பாண்டியன் கூறியுள்ளார். சீக்கிரமே நல்ல மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்துக் கொள்வார் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











