பளபளக்கும் தோளழகில் கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியன் ஃபோட்டோஸ்
சென்னை : 2015 ல் டம்மி டபாசு என்ற படத்தில் முதல் முறையாக நடித்தார் ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 2019 ல் விஜய் டிவி.,யில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும், 2020 ல் பிக்பாஸ் சீசன் 4 லும் போட்டியாளராக கலந்து கொண்டார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன் 2019 ல் புடவையில் படு கவர்ச்சியாக இவர் நடத்திய ஃபோட்டோ ஷூட் தான் இவரை மிகவும் பிரபலப்படுத்தியது. ரம்யா வெளியிட்ட கவர்ச்சி ஃபோட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவின.

அதற்கு பிறகு உடல் எடையை சிக்கென குறைத்த ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் சீசன் 4 ல் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மேலும் பிரபலமான ரம்யா, டிவி நிகழ்ச்சிகள், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார்.
இதுவரை பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் இருந்து வரும் ரம்யா பாண்டியன், அசத்தலாக ஃபோட்டோ ஷூட் நடத்தி, தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அப்படி சமீபத்தில் விதவித மான முக பாவணைகளில், மலைப் பிரதேசத்தில் இவர் நடத்திய ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ரம்யா பாண்டியனா இது என கேட்க வைக்கும் அளவிற்கு, பளபளப்பான தோள் மற்றும் முதுகழகை காட்டிய இவரது ஃபோட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











