வீராயியாகவே வாழ்ந்த ரம்யா பாண்டியன்.. இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ரம்யா பாண்டியன் நடித்துள்ள திரைப்படம் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்.

Recommended Video

Raame Aandalum Raavane Aandalum movie review | Yes sa Busss sa | Filmibeat Tamil

புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற இரண்டு மாடுகள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது.

மிகவும் உணர்ச்சிப்பூர்வமான படமாக வெளியான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் வீராயியாகவே வாழ்ந்துள்ளார்.

இரண்டு மாடுகளை மையப்படுத்தி

இரண்டு மாடுகளை மையப்படுத்தி

ஜோதிகா,சூர்யா வின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்! அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார். கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற இரண்டு மாடுகளை மையப்படுத்திய படமாக இப்படம் உருவாகியுள்ளது. இரண்டு மாடுகளும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது.

வீராயி

வீராயி

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. நடிகை ரம்யா பாண்டியன் இதில் வீராயி என்ற கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்திருக்க ஹீரோவாக மிதுன் மாணிக்கம் குன்னிமுத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை வாணி போஜன் இதில் நர்மதாவாக டிவி ரிப்போட்டர் வேடத்தில் நடித்துள்ளார்.

வாழ்ந்து காட்டியுள்ளார்

வாழ்ந்து காட்டியுள்ளார்

கிராமத்து கதைக்களம், வறண்ட பூமி, செல்லப் பிள்ளைகளாக வளர்க்கும் இரண்டு மாடுகள் என கிராமத்தை கண்முன்னே கொண்டுவந்து காட்டியுள்ள இந்த திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் வீராயி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியுள்ளார். டம்மி டப்பாசு,ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடித்திருந்தாலும் சின்னத்திரை மூலம் மிகவும் பிரபலமானார்.

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை புகழின் உச்சியில் தூக்கி நிறுத்தியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியன் நடித்துள்ள முதல் திரைப்படம் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.

வீராயியாகவே வாழ்ந்துள்ளார்

வீராயியாகவே வாழ்ந்துள்ளார்

இதுவரை பல கதாபாத்திரங்களில் ரம்யா பாண்டியன் நடித்திருந்தாலும் இந்த படத்தில் வீராயியாக வாழ்ந்து காட்டியுள்ளார். அச்சு அசல் கிராமத்து பெண் போலவே மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அரசியல்வாதிகளின் சதியால் தொலைந்துபோன கருப்பன் வெள்ளையனுக்கு பதிலாக வேறு இரண்டு மாடுகளை அரசியல்வாதிகள் கொண்டு வந்து கொடுக்கும் போது நீங்க பெத்த பிள்ளைங்க தொலஞ்சி போனா வேறு ஒருவரின் பிள்ளைங்களைக் கொண்டு வந்து கொடுத்தால் நீங்க ஏற்றுக்கொள்வீர்களா என கேட்கும் வசனம் அமோக கைதட்டல்களை பெற்றது. இதுபோன்ற பல சவுக்கடி வசனங்கள் படம் முழுவதும் இருக்க யதார்த்தமான நடிப்பு, மாடுகள் மீதான தாய் பாசம், தைரியமான கிராமத்துப் பெண் என ரம்யா பாண்டியன் வீராயியாகவே வாழ்ந்துள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X