கணவரிடம் வரதட்சணை வாங்கிய ரம்யா பாண்டியன்.. எவ்வளவு தெரியுமா?.. இது புதுசா இருக்கே பாஸ்
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த ரம்யா பாண்டியன் ஒரு ஃபோட்டோ ஷூட் மூலம் வெகு பிரபலமடைந்தவர். தனது இடையை காண்பித்து அவர் கொடுத்திருந்த ஸ்டில்கள் எல்லாம் வெளியான சமயத்தில் படு ட்ரெண்டிங்கானது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தவான் என்பவரை கடந்த வருடம் ரிஷிகேஷில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கோலிவுட்டில் 80ஸ், 90ஸில் குறிப்பிடத்தக்க ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். அவரது சகோதரர் துரை பாண்டியனுக்கு பிறந்தவர்தான் ரம்யா பாண்டியன். சென்னையில் பிறந்து பள்ளி, கல்லூரி படிப்படை முடித்த அவருக்கு நடிப்பின் மீது ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக எப்படியாவது நடிகையாகிவிட வேண்டுமென தொடர்ந்து முயற்சிகளை செய்துகொண்டிருந்தார். அவருக்கு அவரது குடும்பத்தினரிடமும் ஃபுல் சப்போர்ட் இருந்தது.
சினிமாவில் அறிமுகம்: தொடர்ந்து முயற்சி வந்த ரம்யா பாண்டியனுக்கு 2015ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு என்கிற படத்தில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் படம் சரியாக போகவில்லை. அந்தப் படத்துக்கு பிறகு ராஜுமுருகன் இயக்கத்தில் ஜோக்கர் படத்தில் நடித்தார். 2016ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற; தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அந்தவகையில் ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், நன்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

செம ஃபேமஸான ரம்யா பாண்டியன்: ரம்யாவை பொறுத்தவரை அவரை தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக்கியது என்றால் மொட்டை மாடி ஃபோட்டோ ஷூட்தான். புடவை கட்டிக்கொண்டு தனது இடையை காண்பித்தபடி அவர் கொடுத்த போஸை பார்த்து பலரும் கிறங்கி போனார்கள். அன்றிலிருந்து அவர் மீது பல ரசிகர்களுக்கு கிரேஸ் எக்கச்சக்கமாக கூடியது. அதற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடிக்கவில்லை. சில வெப் சீரிஸ்களில் நடித்த அவர்; சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியி கலந்துகொண்டார். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனிலும் அவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
திருமணம் செய்துகொண்ட ரம்யா பாண்டியன்: சினிமாவில் கண்டிப்பாக பெரிய ரவுண்டு வருவார் என்று ஒருதரப்பினர் அவர் குறித்து ஆரூடம் கூறினார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் கடந்த வருடம் தவான் என்பவரை ரிஷிகேஷில் திருமணம் செய்துகொண்டார். யோகா மாஸ்டராக இருந்த தவானுடன் ஏற்பட்ட பழக்கம் ரம்யாவுக்கு காதலாக மாறியது. அந்தக் காதலுக்கு வீட்டிலும் உடனடியாக சம்மதம் கிடைத்ததால் மகிழ்ச்சியோடு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு நடிக்கும் மைண்ட் செட்டில் ரம்யா இருந்தாலும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. சமீபத்தில்கூட ஒரு ஃபோட்டோ ஷூட் செய்திருந்தார் அவர்.
வரதட்சணை கொடுத்த கணவர்: இந்நிலையில் ரம்யா பாண்டியன் - தவான் ஜோடி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது திருமணம் என்றாலே பெண் வீட்டிலிருந்துதான் மாப்பிள்ளை வீட்டுக்கு வரதட்சணையாக பணம், நகை, கார் உள்ளிட்டவைகளை கொடுப்பார்கள். ஆனால் இங்கோ தவான் தரப்பிலிருந்து ரம்யா பாண்டியனுக்கு லட்ச கணக்கில் பணம் கொடுத்து நகைகள் வாங்கிக்கொள்ள சொன்னதாகவும்; இதனால் திருமண செலவு ரம்யா குடும்பத்துக்கு ஏகத்துக்கும் மிச்சம் ஆகிவிட்டதாக ரம்யா பாண்டியனின் தாயார் ஒரு பேட்டியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











