எனக்கு 31 வயசாச்சு.. ரம்யாவின் ஒப்புதல் 'வயது மூலம்'!

By Sudha

கன்னட நடிகையும், காங்கிரஸ் எம்.பியுமான ரம்யா தனது உண்மையான வயதை டிவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

அவருக்கு 27 வயதாகிறது என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தனக்கு 31 வயதாவதாக அவர் கூறியுள்ளார்.

டிவிட்டரில் தனது உண்மையான வயதைக் குறிப்பிட்டு இதுதொடர்பாக ஒரு டிவிட்டை அவர் தட்டி வி்ட்டுள்ளார்.

27 வயசு இல்லை

27 வயசு இல்லை

எனது வயது 27 என்று பலரும் தவறாக எழுதி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை.

31 வயசாச்சு

31 வயசாச்சு

எனக்கு 31 வயதாகி விட்டது. அதற்காக நான் வருத்தப்படவில்லை. பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் ரம்யா.

குறைத்துக் காட்டாத பெருந்தன்மை

குறைத்துக் காட்டாத பெருந்தன்மை

பெரும்பாலான நடிகைகள் தங்களுக்கு 50 வயதானாலும் கூட எனக்கு இப்போ 18தான் நடக்குது என்று பொய் புளுகுவது வழக்கம். ஆனால் ரம்யா வித்தியாசமாக இருக்கிறார்.

இப்போதும் 3 படம்...

இப்போதும் 3 படம்...

ரம்யா கையில் இப்போதும் கூட 3 படங்கள் நிலுவையில் இருக்கிறதாம். இவற்றை சினிமாவுக்கு முழுக்குப் போடுவதற்கு முன்பு முடித்துக் கொடுத்து விடுவதாக அவர் உறுதியளித்திருந்தார்.

முடித்துக் கொடுப்பாரா...

முடித்துக் கொடுப்பாரா...

ஆனால் தற்போது எம்.பியாகி விட்டார். செம பிசியாகவும் இருக்கிறார். எனவே எப்போது இந்தப் படங்களை அவர் முடித்துக் கொடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை. ஆனால் மூன்றையும் சொன்னபடி நடித்துக் கொடுப்பேன் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு உறுதியளித்துள்ளாராம் ரம்யா.

தொடருமா...

தொடருமா...

ஆனால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பது குறித்து ரம்யா இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லையாம். சினிமாவுக்கு முழுக்கு என்பது மட்டும் உறுதியானதாம். அதில் மாற்றம் இருக்காதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X